இந்தியன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயலாளரும், மக்கள் ரிப்போர்ட் பத்திரிகையின் முதன்மை ஆசிரியருமான தோழர் செய்யது இக்பால் அவர்கள் நேற்றிரவு (11-07-2020) காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்து கிறோம். திராவிடர் கழகத்தின் மீதும், நம் மீதும் பெரு மதிப்பு கொண்டவர். மதச்சார்பின்மைக்கான களங்களிலும், மனிதநேயப் பணிகளிலும் ஈடுபாட்டோடு செயல்பட்டவர்.
அவருடைய மறைவுக்கு நம் ஆழ்ந்த இரங்கலையும், அவருடைய இணையர், மகன் திரு.சையது சுபஹான் மற்றும் குடும்பத்தினருக்கும், இந்தியன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின ருக்கும் நம் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
12.7.2020
சென்னை
No comments:
Post a Comment