ஆசிரியருக்குக் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 9, 2020

ஆசிரியருக்குக் கடிதம்

தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்!


சமஸ்கிருதம்  படித்தவர்களுக்கு மட்டுமே அனைத்து துறைகளிலும் வாய்ப்பு என்ற கருத்தை தன் போராட்டத்தின் மூலம் வேரோடு பிடுங்கி எறிந்தவர் பெரியார் என்ற கருத்து உங்களின் பேச்சின் மூலம் எங்கள் மனதில் ஆழமாக பதிந்தது.


பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கானல் நீராகவே இருந்த மருத்துவத்தை , அருகில் சென்று பார்த்தாலும் கண்ணிற்கு தெரியக்கூடிய நன்னீராக தன் போராட் டத்தின் மூலம் மாற்றிக் காட்டியவர் பெரியார் என்றும், சமுதாயத்தில் எந்த ஒரு அநீதி ஏற்பட்டாலும் அந்த அநீதிக்கு எதிராக ஒலிக்கும் முதல் குரல் திராவிடர் கழகத்தினுடைய குரலாகத் தான் இருக்கும் என்ப தையும் நாங்கள் உணர்ந்தோம்.


தங்களின் போராட்ட வலிமையும் அதற்கான பிரதி பலிப்பும் உங்களின் பேச்சின் மூலம் கற்றுக் கொண் டோம்.


நாங்கள் எப்பொழுதும் உங்கள் தலைமையில் பெரியார் வழி நடந்து செயல்படுவோம் அய்யா!


மா. சிவகணேஷ்


முதுநிலை மருந்தியல் (முதலாமாண்டு)


திராவிட மாணவர்  கழகம்


பெரியார்  மருந்தியல்  கல்லூரி, திருச்சி


- - - - -


வணக்கம்.


"மருத்துவக் கல்வியில் சமூகநீதி" தலைப்பில் நடை பெற்ற நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது.....


இட ஒதுக்கீடு என்பதை பற்றி முதன்முறையாக கேட்டு தெரிந்து கொண்டேன்... இன்னும் நிறைய தெரிந்து கொள்வதற்கும் ஓர் உந்து சக்தியாக இருந்தது..


அரசியல் ஆசை இல்லாமல் மக்களுக்காக மாணவர்களுக்காக இன்றும் சொற்பொழிவாற்றும் போராடும் ஆசிரியரின் கொள்கை வியக்கத்தக்கது..


அவரது பேச்சில் நிறைய வரலாறு அறிவியல் சமூக சிந்தனைகள் என்று பலவற்றை காணமுடிந்தது...


அய்யா ! நீங்கள் ஒரு நூலகம்! இந்த நிகழ்ச்சியின் மற்றும் ஒரு சிறப்பு என் அண்ணன் மானவீரனின் பேச்சு... ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை ... எப்போதும் போல தெளிவாக கருத்தாக அழகு தமிழில் உரையாற்றினார்.


ஒரு சிலர் குடும்பத்தோடு அமர்ந்து இந்த நிகழ்ச் சியை கண்டுகளித்தது ஏதோ இணையதள திருவிழா போன்று இருந்தது....


வாய்ப்பளித்த அண்ணன் மானவீரனுக்கு நன்றி...


COTITS, M.D (Anesthesia) 1st year, 
KEM Hospital, Mumbai
(Studied at Vinayaka Missions 
Medical College, Salem)
Native-chidhambaram.


- - - - -


இன்றைய தலைமுறை இளைஞர்கள் அனைவரும் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றை ஆசிரியர் உரையின் மூலம் அறிந்தோம். இவ்வர லாற்றை எங்கள் நண்பர்களுக்குக் கூறி அவர்கள் அறியும்படி செய்வது எங்கள் பொறுப்பு,


- முகில் இராமகிருஷ்ணா


பல் மருத்துவக் கல்லூரி, கோவை


- - - - -


அன்பு நிறை ஆசிரியர் அவர்களுக்கு:


தங்களின் ”ஒப்பற்ற தலைமை” தலைப்பின் மூன்று உரைகளையும் கேட்டு மகிழ்ந்தோம். பலப்பல புதிய அறிவைத் தூண்டும் செய்திகளை அறிந்தோம்.  தற்போது தாங்கள் நிகழ்த்திவரும் “பகவத் கீதை ஆய்வுரைகள்” மிக சிறப்பு. தனித்தன்மை பொருந்தி யவை. இவ்வுரைகளை நிகழ்த்த தங்களால் மட்டுமே முடியும். மிக்க நன்றி


இன்றைய தங்களின் உரைக்குப் பிறகு தொலை பேசியில் அழைத்தேன். இணைப்பு சிக்கலால் பேச இயலவில்லை.


கீதையில் அருச்சுனன், உறவினர்களை கொல்ல தயங்கவில்லை. உறவினர் மனைவிகள் விதவைகளாகி, மற்ற ஜாதியினரை மணந்தால் நரகம் செல்ல நேரிடும் என்பதாலேயே தயங்கினான் - என்பது புதிய செய்தி


பல கபிலர்கள் இருந்தார்கள் என்பதும் புதிய செய்தி. பாரியின் நண்பர் என்றுதான் நான் கபிலரை நினைத்திருந்தேன்.


ரோமிலா தோப்பர் அவர்களின் புதிய புத்தகத்தை அறிமுகப்படுத்தினீர்கள். படிக்க முயலுகிறோம்.


இந்த கரோனா காலத்தில் ஒரு நன்மை - உங் களின் உரைகளை (வகுப்புகளை) நாங்கள் தொடர்ந்து கேட் கும் வாய்ப்பு. 2021 மார்ச் மாதத்திற்குள், சரியான தடுப் பூசி (vaccine) நடைமுறைக்கு வந்து நிலை சரியாகும் என எண்ணுகிறேன். மார்ச் மாதத்திற்கு மேலும் ஆகலாம். எப்போது சரியானாலும், விமான பயணம் துவங்கிய உடன் தமிழகம் வருகிறேன்.


நிலை சரியானாலும், தங்களின் தொடர் பயணங் களை 90% மாவது குறைத்து, இணையவழியாகவே, இப்போதுபோல உரைகள், மற்ற நிகழ்வுகள் (திறந்து வைத்தல், கலந்துரையாடல், சிறப்புரைகள்) நிகழ்த் தினால் நல்லது.


உடல்நலம் சிறந்து தாங்கள் உற்சாக மனநிலையில் எப்போதுமிருக்க பெரிதும் விழைகிறோம்.


அன்புடன்,


அரசு செல்லையா,


மேரிலாண்டு, அமெரிக்கா


No comments:

Post a Comment