‘‘ஒப்பற்ற தலைமை-2'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை
சென்னை, ஜூலை 11- தந்தை பெரியாரின் முன்யோசனை அவருக்கும், இயக்கத்திற்கும், நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயன்பட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
‘ஒப்பற்ற தலைமை'
கடந்த 28.6.2020 மாலை 5.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் இரண் டாம் பொழிவினை காணொலிமூலம் கழகத் தோழர்களி டையே ஆற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தஞ்சாவூரில் காலித்தனம்!
தஞ்சாவூர் மகாநாட்டின் போதும் போடப்பட்ட பொதுக் கூட்டத்தில் ஈ.வெ.ரா, பேசும்போது, காங்கிரஸ் காரர்கள் பலருக்குக் கள்ளை வாங்கி ஊற்றிக் கலவரம் செய்யச் செய்தார்கள். கைகலக்கும்படியான நிலைமை ஏற்பட்டது. உடனே தோழர் ஈ.வெ.ரா., சுயமரியாதைக்காரர் களைக் கோபித்துக் கொண்டதால், காங்கிரஸ் காலிகள் தங்கள் இஷ்டம்போல் கூப்பாடு போட்டு, அவர்கள் வாய் வலித்ததால் தானாக அடங்கினார்கள். அன்று அது காரண மாய் இரவு 10 மணிவரை கூட்டம் நடந்தது. மாயவரம் மகாநாட்டின் போதும், கும்பகோணம் காந்திபார்க்கில் தோழர் ஈ.வெ.ரா., பேசும்போதும், காங்கிரஸ் காலிகள் கலவரம் செய்தார்கள். மழை பெய்தும், கூட்டம் கலையா மல் கிரமப்படி முடிவு பெற்றது. போன மாதம் 13 ஆம் தேதி தூத்துக்குடி நாகம்மாள் வாசகசாலை ஆண்டு விழாவின் போது நடந்த பொதுக்கூட்டத்தில், 10,000 ஜனங்கள் உள்ள கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ரா.வும், ஜனாப் கலிபுல்லா சாயபும் பேசுகையில், காங்கிரஸ் காலிகள் மண்ணை வாரிப்போட்டு, கற்கள் எறிந்து, 'ஜே!' கூப்பாடு போட்டு மிருகங்கள் போல் கத்திச் செய்த தொல்லைகள் போலீசார் வந்த பிறகே அடங்கிற்று. அந்த சமயம் சுயமரியாதைக் காரர்களை ஈ.வெ.ரா, கண்டித்தும் சுயமரியாதைக்காரர்கள் பேசாமல் இருக்காவிட்டால், தான் கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஓடிப்போவேன் என்றும் மிரட்டியதால், சுயமரியாதைக்காரர்கள் சும்மா இருந்தார்கள். அப்புறம் தோழர்கள் ஈ.வெ.ரா., கலிபுல்லா சாயபு, விஸ்வநாதம் ஆகி யவர்கள் பேசி 11லுக்கு கூட்டம் கிரமப்படி முடிவுபெற்றது. அப்படி இருந்தும் 'கல் விழுந்தது. செருப்பு விழுந்தது. ராமசாமியை மடக்கிக் கொண்டார்கள்; கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஓடிவிட்டார்' என்று காங்கிரஸ் பத்திரிகைகள், மற்றவர்களையும் இதுபோல் கலகம் செய்யத் தூண்டி விட்டன. அதில் ஒரு பத்திரிகையின் புளுகுக்கும், அதன் நிருபர் வேண்டுமென்றே செய்த அயோக்கியத்தனத்துக்கும் ஒரு உதாரணம்கூட கூறுகிறோம். அதாவது, அன்றைய கூட்டத்தில் ‘‘தோழர் அண்ணாதுரை இந்தியை கண்டித்துப் பேசினார். அதனால் கூட்டம் கோபித்துக் கொண்டது'' என் பதாக எழுதி இருந்தது. உண்மையில் தோழர் அண்ணா துரை அவர்கள் அன்று தூத்துக்குடிக்கே வரவில்லை. இப்படியாகக் காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவைகளும், பார்ப்பன நிருபர்கள், பார்ப்பன பத்திராதிபர்கள் என்பவர் களும் பொய்யும், புளுகும், அயோக்கியத்தனமான தூண் டுதலும் செய்வதன் மூலமே காங்கிரஸ் காலிகள் காலித் தனத்துக்கு தூண்டப்பட்டு விடுகிறார்கள்.
காங்கிரஸ்காரர்களுக்கு முதலாவது அரசியல் ஞானம் கிடையாது என்பதோடு ஒழுக்கமும், நாணயமும் இல்லா மல் இருப்பதோடு, சர்வம் சூழ்ச்சிமயமாய் கூலிக்குக் கூப்பாடு போடும் மயமாய் இருப்பதால், ஒரு கூலி(ரிப்) போர்ட்டர் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லாத திறமையற்று ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியவர்களாகி விடுகிறார்கள். இந்த லட்சணத்தில் அவரவர்கள் நாக்கை அடக்குவதில்லை - இதற்கு யார் என்ன செய்யமுடியும்?
உதாரணமாக, சென்ற வாரம் காஞ்சிக்குப் போன காங்கிரஸ்காரர்கள், மகாநாடு நடந்து 4 ஆவது நாளையில் அங்கு போய் ஏன் அயோக்கியத்தனமாய் பேச வேண்டும். காஞ்சிபுரம் பொதுமக்கள் 3,000 ரூபாய் வசூல் செய்து, ரூ.4,000 இந்தி எதிர்ப்பு மகாநாட்டுக்கு செலவழித்திருக் கிறார்கள். அப்படி இருக்க, அவர்கள் 3,000 வசூல் செய்து 2,000 ரூபாய் மீத்திக் கொண்டார்கள் என்று முட்டாள் தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் பேசினதால், ஒருவர் மறுக்க வேண்டியதாயிற்று. அவரும், அவ்வூர் பெரிய மனிதர்களில் முக்கியமானவரே ஒழிய, முனிசிபல் கவுன்சிலராயிருந்து லஞ்சம் வாங்கிப் பிழைப்பவரோ அல்லது சட்டசபை மெம்பராயிருந்து சர்வத்தையும் 75 ரூபாய்க்கு தியாகம் பண்ணி எச்சிலைக் கூலியாய் இருப்பவரோ அல்ல. அப்படிப்பட்டவரைப் பொய்யாக்க வேண்டுமென்று போக்கிரித்தனமாய் பேசினால் கலவரம் உண்டாகாதா? என்று கேட்கின்றோம். இந்தக் கோபத்தால் தான் தலைமை வகித்த ‘‘தினமணி'' ஆசிரியர் ஊருக்குப் போனவுடன் கொலை செய்யத் தூண்டி விட்டார் போலும். இந்த விபரம் ‘மெயில்' பத்திரிகையில் இருக்கிறது. இதை ‘‘தினமணி'' கோழைத்தனமாய் மறைத்துவிட்டது. இந்தக் கோழைத்தனம் தான் கொலை செய்யத் தூண்டுகிறது. ‘‘அடி, உதை, கொலை செய்'' என்று எப்படிப்பட்டவன் சொன்னாலும், எழுதினாலும் அவர்களை பக்கா கோழை கள் என்று பொது ஜனங்கள் கருதிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது நமது 50 வருஷ அனுபவம் அடிக்கும், உதைக்கும், கொலைக்கும் மற்றவர்களை தூண்டப் பயப்படுபவன் எப்பொழுதும் வீரனாவான் என்பதோடு, சந்தர்ப்பம் நேர்ந்தால் முதல் அணியிலும் நிற்பான் என் பதையும் அனுபவத்தில் கூறுகிறோம். நிற்க,
கும்பகோணம் கலவரம்
கும்பகோணம் கலவரத்தைப் பற்றியும் சிறிது கூறுகி றோம். இது விஷயமாய் வாசகர்கள் “ஹிந்து" பத்திரி கையைப் பார்க்க விரும்புகிறோம். அதாவது, 11 ஆம் தேதி மெயிலில் கும்பகோணம் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி ஒரு சுயமரியாதைக்காரன் அடிபடுவதைத் தடுப்பதற்காக ஓடினார். பொது ஜனங்கள் அந்தக் காரியதரிசியைச் சந்தேகித்து அடித்துவிட்டார்கள் என்று எழுதி இருக்கிறது. எனவே, சுயமரியாதைக்காரர்களை யார் அடிக்க முயற் சித்து இருக்க முடியும்? பொது ஜனங்கள் காங்கிரஸ் காரிய தரிசியை யாராய் நினைத்து அடித்து இருக்க முடியும்? என்பதை கவனித்தால் காங்கிரஸ்காரர்களால் பலாத்காரம் நடந்திருக்கிறதா? சுயமரியாதைக்காரர்களால் நடந்திருக் கிறதா? என்பது விளங்கும்.
மற்றும் கும்பகோணம் கலவரத்தைப் பற்றி தினமணி 8 ஆம் தேதி பத்திரிகையில் ‘‘சுயமரியாதைக் காலிகளும், இன்னும் பலரும் காங்கிரஸ்காரர்களையும், பொது ஜனங் களையும் உதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்'' என்று எழுதி இருக்கிறது. ‘‘இன்னும் பலர்'' என்றால், அவர்கள் யாராய் இருக்க முடியும்? ‘‘பொது ஜனங்களையும் உதைக்க ஆரம் பித்தார்கள்'' என்றால் பொது ஜனங்களை உதைக்கக் கார ணம் என்ன? என்பவைகளைக் கவனித்தால் காங்கிரஸ் காரர்கள் யோக்கியதையும், அங்கு நடந்த காரியமும் அவர்கள் மீது பொது ஜனங்களுக்கு உள்ள எண்ணமும் நன்றாய் விளங்கும். வாஸ்தவம் சொல்ல வேண்டுமானால் அக்கலவரம் காங்கரஸ்காரருக்கும், சமதர்மக்காரருக்கும் ஏற்பட்ட கலவரமாகும். இதை உள்ளபடி வெளியிட தின மணிக்கு யோக்கியதையும், தைரியமும், நாணயமும் இல் லாததால் இம்மாதிரி அயோக்கியத்தனமாக மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறது.
- தொடரும்
No comments:
Post a Comment