டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- உ.பி.யில் எட்டு காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக் கொன்ற விகாஷ் துபே, ம.பி.யில் உள்ள உஜ்ஜைன் கோயில் அருகே கைது செய்யப்பட்டு கான்பூருக்குக் கொண்டு செல்லும் வழியில் தப்பிக்க முயன்றதாகச் சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் மூலம், இவனைப் பின்னால் இருந்து இயக்கிய கூட்டம் தப்பித்து விட்டது. உ.பி.யில் இது போன்ற சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மேலும் தொடரும் என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்து விட்டது. புனே நகரில் மேலும் எட்டு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கிட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சித்த மருத்துவத்தின் அவசியம் மற்றும் நன்மை குறித்து கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் 14 கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:
- உ.பி.யில் முசாபர் நகர் ஆசிரமத்தின் சாமியார் கடந்த சில மாதங்களாக சிறுமிகளைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள் ளான் என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டான்.
- மந்த நிலையில் இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது மீளும் நிலைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், முழுவதுமாக மீள் வதற்குப் பல மாதங்கள் ஆகும் என தலையங்கச் செய்தியில் தெரி விக்கப்பட்டுள்ளது.
- குடந்தை கருணா
11.7.2020
No comments:
Post a Comment