கேள்வி: கோபாலகிருஷ்ண கோகலே - காந்திஜி, நேரு - படேல், சத்தியமூர்த்தி - காமராஜர், வாஜ்பாய் - அத்வானி, பெரியார் - அண்ணா, கருணாநிதி - அன்பழகன், ஜெயலலிதா - சசிகலா, மோடி - அமித்ஷா, எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் போன்றோரின் உறவுகள் எப்படி?
பதில்: கோகலே - காந்தி: ஆசிரியரும் மாணாக்கரும்; நேரு - படேல்; விடாப்பிடியானவரும், விட்டுக் கொடுத்தவரும்; சத்யமூர்த்தி - காமராஜர்; குருவும், சிஷ்யரும்; பெரியார் - அண்ணா; அழவிட்டவரும், அழுதவரும்; கருணாநிதி - அன்பழகன்; சொன்னவரும், கேட்டவரும்; ஜெ - சசிகலா ஒளியும், நிழலும்; மோடி - அமித்ஷா - நம்பர் 1; நம்பர் 2; பன்னீர்செல்வம் - எடப்பாடி; 'ஜெ' என்ற 1-க்கு அடுத்த சைபர்; 'சசி' என்ற 1-க்கு அடுத்த சைபர்.
('துக்ளக்' 15.7.2020 பக்கம் 12)
ஏன் இதோடு நிறுத்தி விட்டார்? சந்திரசேகரேந்திர சரஸ்வதி - ஜெயேந்திர சரஸ்வதி என்ற ஒரு ஜோடியையும் சேர்த்தால் கலகலப்பாக இருந்திருக்குமே. 'அந்தரங்கமாக எதையும் செய்பவர், பட்டப் பகலிலே கூட 'பச்சையாக எதையும் செய்பவர்' என்று எழுதிடக் கூச்சமா!
சோ - குருமூர்த்தி என்ற ஒன்றையும் கூட ஒப்பிட்டு இருக்கலாமே! உரிமையாளரும் - களவாடியவரும் என்று போடலாம் அல்லவா! தேவநாதன் (மச்சேந்திரநாதன் கோயில் குருக்கள்) - ஜெயேந்திரர் என்று ஒப்பிட்டு ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர் என்று எழுதியிருக்கலாம் அல்லவா!
சரி. குருமூர்த்தியின் பதிலுக்கு வருவோம். கோபாலகிருஷ்ண கோகலே - காந்தியும் ஆசிரியரும் - மாணவரும் என்பது குருமூர்த்தியின் கருத்து.
உலகத்திலேயே ஒரே ஒரு பார்ப்பான்தான் நல்லவர். அவர்தான் கோபாலகிருஷ்ண கோகலே என்று தந்தை பெரியாரிடம் காந்திஜி பெங்களூரில் (1927 சந்திப்பு) சொன்னதுண்டு. அந்த வகையில் பார்க்கப் போனால் பார்ப்பனர்களில் தப்பிப் பிறந்தவர் கோகலே- பார்ப்பனர்களைப் பற்றிப் பிற்காலத்தில் உணர்ந்தவர் காந்தியார் என்று போட்டிருக்கலாமே!
நேரு - படேல்: விடாப்பிடியானவரும் - விட்டுக் கொடுத்தவரும் என்பது 'துக்ளக்கின் கணிப்பு.
வகுப்புவாதத்தை எதிர்த்து சிகப்புக் கொடியைக் காட்டியவர் முன்னவர் - பச்சைக் கொடி காட்டியவர் பின்னவர் (குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் மத்திய அரசு ரூ.300 கோடி, குஜராத் அரசு ரூ.700 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது என்றால் சும்மாவா!) சத்யமூர்த்தி - காமராஜர் குருவும் சிஷ்யரும் என்கிறது துக்ளக்; ராஜாஜி எதிர்ப்பு என்ற புள்ளியில் ஒன்றிணைந்தவர், மேலும் அய்யங்கார்-அய்யர் எதிர்ப்பு என்று கூட போடப்பட்டிருந்தால் சரியாக இருந்திருக்குமோ! பெரியார் -அண்ணா அழ விட்டவரும், அழுதவரும் - இதுதான் துக்ளக்கின் கைச் சரக்கு.
ஆரியத்தை அதிரடித்தவர் - ஆரியத்தைஅழகாக ஏமாற வைத்து, ராஜாஜியை அழ வைத்தவர் அண்ணா - என்றால் பிரமாதமாக இருந்திருக்குமே!
மோடி - அமித்ஷா - நம்பர் -1 நம்பர் - 2 - இது குருமூர்த்தி பார்வை: மாப்பிள்ளை - மாப்பிள்ளைத் தோழர் என்றால் அவர்களுக்கேகூட மகிழ்ச்சியாக இருக்குமே!
- கருஞ்சட்டை
No comments:
Post a Comment