* உலகில் கரோனா பிரச்சினைக்குப் பிறகும்கூட 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பமாட்டார்கள் - ஓர் ஆய்வு.
* சென்னையைத் தவிர்த்து வெளி மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரிப்பு.
* புற்றுநோய் அணுக்களை அழிக்கும் மஞ்சள் - சென்னை அய்.அய்.டி. கண்டுபிடிப்பு.
* பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வேலை தேடும் இளைஞர்களுக்குப் பயன்படும் வகையில், இணைய வழி பயிற்சிகளை வேலை வாய்ப்புப் பயிற்சித் துறை ஏற்பாடு செய்துள்ளது (15.7.2020) முன்பதிவு செய்துகொள்ளலாம். (http://tnvelaivaaippu.gov.in).
* தப்ளிக் மாநாட்டில் பங்கேற்றதாக கைதான 129 வெளிநாட்டு இஸ்லாமியர்களை ஹஜ் சொசைட்டிக்கு மாற்ற இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.
* ஊரடங்கு விதிகளை மீறியதால் மாணவர்கள் உள்பட 10 இந்தியர்கள் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தல்.
* ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த ராகுல்காந்தி முயற்சி!
* கரோனா வைரஸ் தடுப்பூசி: ரஷ்ய பல்கலைக் கழக விஞ்ஞானிகள் வெற்றி என்று ஒரு தகவல் நேற்று.
* தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை பேருந்துகள் ஓடாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
* இட ஒதுக்கீடு கோரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஆணை.
* ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்களின் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை!.
* அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தூக்குத் தண்டனை.
No comments:
Post a Comment