சென்னை,ஜூலை12, சிறைத் தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் அளிப்பது குறித்த சிறை விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதி மன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 2, 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற் றோருக்கான சிறை விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கி யுள்ளது. அதிக, குறைந்த தண்டனை பெற்றோ ருக்கு ஒரே மாதிரியான பரோல் விதியால் கைதிகளின் உரிமை பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடத்தல் சம்பவத்தில் 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவருக்கு பரோல் கோரிய வழக்கில் பரிந்துரை செய்துள்ளது. கைதிகள் 2 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகே பரோல் வழங்க வேண்டுமென சிறை விதி உள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனைக் கைதிகள், ஒரு மாதம் அல்லது 2 மாதம் பரோல் பெற்று வெளியில் செல்கின்றனர். அதுவும், நோய் சிகிச்சை, பெற்றோர் மரணம், குடும்பத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரை பார்ப்பதற்கு, திருமணம், போன்ற விஷயங்களுக்கு தான் பரோல் வழங்கப்படும். ஆனால், பரோல் காலம் முடிந்தபின், அவர்கள் சிறைக்கு திரும்ப வேண்டும். மேலும் பரோல் காலத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு எங்கும் செல்ல கூடாது. ஆனால், பரோலில் வெளியே செல்லும் பலர் உடனடியாக சிறைக்கு திரும்புவ தில்லை. தலைமறைவாகி விடுகின்றனர். அவர்களை காவல்துறையினர் தேடி கண்டு பிடித்து சிறையில் அடைக்கின்றனர். சிலரை கண்டுபிடிக்க முடிவதில்லை.
No comments:
Post a Comment