மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கிறித்துவ மதப்பிரிவான Full Gospel Church of god என்ற அமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள், அவர்கள் ஏசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள்தான்; ஆனால் கிறிஸ்துவ மதத்தை நம்பாதவர்கள் என்ற நிலைப்பாடுடையவர்கள்; டாக்டர் ரஞ்சித் மொய்ட்டி, கிஷோர்நசாரே, சுபாஷ் ரணவேர் ஆகிய மூவரும் நாங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல; எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று மராத்திய அரசின் கெசட்டில் வெளியிட (கட்டணம் கட்டி) விண்ணப்பம் செய்தனர்.
அவர்களின் விண்ணப்பங்களை மாநில அரசும், அச்சகத் துறையும் வெளியிட மறுத்துவிட்ட நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் (PIL) பொது நல வழக்கினை தாக்கல் செய்தனர். நீதிபதிகள் அபய் ஒக்கா, ஏ.எஸ். சதுர்கர் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு யாரையும் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட வேண்டும் என்று அரசு கட்டுப்படுத்த முடியாது, தங்களுக்கு மதமில்லை (No Religion) என்று அறிவிப்பதற்கு எவருக்கும் முழு உரிமையுண்டு என்று தீர்ப்பு அளித்தனர் (23.9.2014)
(இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ‘விடுதலை’யில் வரவேற்று அறிக்கை (24.9.2014) வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது).
No comments:
Post a Comment