காலிகளின் வன்முறை வெறியாட்டம்
விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதியை கொலை செய்ய முயற்சி?
பல கட்சியினரும் திரண்டு சென்று காவல்துறையில் புகார் மனு!
விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதி மீது கொலை முயற்சித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
நேற்றிரவு (19.7.2020) 9 மணிக்கு அவரது வீட்டுக்கு ராஜேஷ் கண்ணா என்பவரும் மற்றும் இருவரும் கத்தி, அரிவாள் உள் ளிட்ட ஆயுதங்களுடன் சென்று, திருப்பதி யைப் பிடித்துக் கீழே தள்ளித் தாக்க முற்பட்டதுடன், தகாத வார்த்தைகளால் இழித்துப் பேசியுள்ளனர்.
தோழர் திருப்பதி தன் வீட்டுக்குள் ஓடி போலீசாருக்குப் போன் செய்த நிலையில், காலிகள் ஓடிவிட்டனர்.
இன்று (20.7.2020) காலை காவல் நிலை யத்தில், இல.திருப்பதி புகார் எழுதிக் கொடுத்துள்ளார்.
திராவிடர் கழகம், தி.மு.க., ம.தி.மு.க., இரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை மற்றும் உள்ளூர் பல்வேறு பொது அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் 60 பேர் காவல் நிலையத்திற்குச் சென்று கொலை முயற்சியை மேற்கொண்ட காலிகளை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தினர்.
No comments:
Post a Comment