செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 31, 2020

செய்தித் துளிகள்....

* கைது நடவடிக்கையின்போது உச்சநீதிமன்ற உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று காவல் துறைத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) ஜே.கே.திரிபாதி அறிவித்துள்ளார்.


* மழலையர்க்கு இணைய  தள வகுப்புகளுக்குத் தடை.


* காஷ்மீருக்கு 370 மற்றும் 35(ஏ) சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படாத வரை தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார் உமர் அப்துல்லா.


* திரிபுராவில் - உச்சநீதிமன்றத் தீர்ப்புக் காரணமாக 12 ஆயிரம் ஆசிரியர்கள் - சமையல் வேலை, தோட்ட வேலை இரவுப் பாதுகாவலர் வேலைகளுக்குச் செல்லும் பரிதாப நிலை.


* பிரியங்கா காந்தி அரசு பங்களாவைக் காலி செய்தார்.


* சீனா - ருசியாவை உளவு பார்ப்பதாகக் குற்றச்சாட்டு - அதன் காரணமாக எஸ்.400 ஏவுகணை அனுப்புவதை ருசியா நிறுத்தி விட்டது.


* அயோத்தி ராமர் கோவில் தீட்சதர் பிரதீப்தாஸ் மற்றும் 14 போலீசாருக்குக் கரோனா தொற்று! (இராமன் உபயமோ?).


* பக்ரீத் பண்டிகைக்குப் பொது இடங்களில் விலங்குகளைப் பலியிடக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.


* முகக்கவசம் அணியாத எம்.பி.,க்கள் வெளியேற்றப்படுவர் - அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை.


* பழங்காலத்தில் உயிரினம் வாழ்ந்ததா? செவ்வாய்க் கோளுக்கு விண்கலம் அனுப்பியது நாசா!


No comments:

Post a Comment