ஜாதியின்பெயரால் இழிவுபடுத்துவதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 22, 2020

ஜாதியின்பெயரால் இழிவுபடுத்துவதா

ஜாதியின்பெயரால் இழிவுபடுத்துவதா?


டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் ஒருவர், மூத்த பயிற்சி பெண் மருத்துவரிடம் நீங்கள் உங்கள் தரத்தை (எந்த ஜாதியிலிருந்து வந்தீர்கள் என்பதை) மனதில் வைத்து செயல்படுங்கள்;  போன்ற சொற்களைப் பயன்படுத்தியால், ஜாதி  மற்றும் பாலினரீதியாக அவமானப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.


அவர் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத் தலைமையிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அவர்கள் அமைத்த விசார ணைக் குழுவின் விசாரணை, நியாயத்துடன் நடைபெறவில்லை; விசாரணைக் குழுவில் உள்ளவர்களால் புகாரைத் திரும்பப் பெறுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது.  இதனையடுத்து அவர் தாழ்த்தப்பட்டோர் நல ஆணை யத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுகொண்ட ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி 17 பக்க அறிக்கையை ஜூன் 24 அன்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவிடம் சமர்ப்பித்தது.


மருத்துவமனையின் பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தில்  பணிபுரியும் அந்த பார்ப்பனப் பேராசிரியருக்கு எதி ராக அனைத்து சான்றுகளும் இருப்பதால், நிர்வாகம் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்  பரிந்துரைத்தது.


"குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக ஜாதி மற்றும் பாலினப் பாகுபாடுகளை வெளிப்படுத்தும் சொற்களை நேரடியாக பயன்படுத்தவில்லை, மாறாக வளர்ப்பு விலங்கின் பெயரைப் பயன்படுத்தி உங்கள் நிலையை (எந்த ஜாதி என்பதை) கவனத்தில் கொள்ளுங்கள்  போன்ற சொற்களைப் பயன்படுத் தினார். இந்த சொற்கள் கேவலமானவை, இழிவானவை. பாதிக்கப் பட்ட பெண்ணின்  திறமைகளைத் தொடர்ந்து குறைகூறிக் கொண்டு  மறைமுகமாக உனது ஜாதியினர் எந்த வேலையைச் செய்தார்களோ, அதைச் செய்யாமல் இங்கு ஏன் வந்தாய் என்பது போன்ற சமூக பாகுபாடுகொண்ட சொற்களால் வசைபாடினார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எய்ம்ஸ் நிறுவனத்தின் துணை இயக்குநர் (நிர்வாகம்) எஸ்.கே பாண்டா "இந்த அறிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கத் தொடங் கியுள்ளோம். இதுதொடர்பாக  விசாரணைக்குழு  சில நட வடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான சரியான செயல்முறையை  மேற்கொண்டு வருகி றோம். மேலும்  அந்தப் பேராசிரியர்மீதான புகாருக்குப் போது மான அனைத்துச் சான்றுகளும் உள்ளன. குற்றம் சாட்டப்பட்ட வரும் தனது செயலை ஒப்புக்கொண்டார், சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனÕÕ என்று கூறினார்.


பெண் மருத்துவரின் புகார் தொடர்பாக, ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட  உள்விசாரணைக் குழு குறித்து கூறியபோது, நேர்மை, மரியாதை  கவுரவத்துடன் விசாரணைக் குழு விசார ணையை நடத்தவில்லை. புகாரைத் திரும்பப் பெறுமாறு அழுத்தம் கொடுத்ததன் மூலம், சமூகத்தின் பின்தங்கிய பிரிவில் இருந்து வந்த பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்காது என்ற உணர்வை உருவாக்கியது. 


இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சாட்சி அளித்த மூத்த பயிற்சி மருத்துவர்கள்,  அப்பெண் மருத்துவரை எதற்குமே தகுதி இல்லாதவர் என்றும், உங்களது  தொழில்முறை என்பது மருத்துவம் அல்ல என்றும், பல்வேறு விதங்களில் அவரை விமர்சனம் செய்ததாகவும், பெண் மருத்துவரை பயிற்சியின்போது ஒதுக்கிவைத்தார் என்றும், பிறரிடம் அவரது ஜாதி தொடர்பாக மறைமுகமாகக் கூறி அவருடன் பழகுவதைக் குறையுங்கள் என்றும் சாட்சியங்கள் அளித்துள்ளனர்.


இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் கொடுத்த புகாரில், "மார்ச் 16 அன்று, நோயாளிகள், ஊழியர்களுக்கு முன்னால் பேராசிரியர் என்னை நோக்கி ஒழுக்கமற்ற மற்றும் ஜாதிப் பாகுபாடுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன் படுத்தினார்" என்றும் குற்றம் சாட்டினார். "எனது மருத்துவ அறையிலிருந்து நான் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டேன்.  ஒரு கட்டத்தில், நீங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவுப் பெண், உங்கள் எல்லைக்குள் இருங்கள் என்று அனைவர் முன்பும் பேசியுள்ளார்; அதன்பிறகு, என்னை அழைத்துப் பேசிய  தலைமை மருத்துவர், பேராசிரியரின் நடவடிக்கை தொடர்பாக யாரிடமும் புகார் அளிக்ககூடாது என்று எச்சரித்ததாகவும் கூறினார்.


இது இந்தியாவின் தலைநகரத்தில் நடந்தது என்றால் தமிழ்நாட்டில் நடந்த ஒரு நிகழ்வு தலைகுனியத்தக்கதாகும்.


தருமபுரி பென்னாகரம் அருகே கோடானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், கடந்த 15ஆம் தேதி மலம் கழிப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள புதருக்குள் சென்றுள்ளான். அங்கு வந்த நில உரிமையாளர் ராஜசேகர் என்பவர், சிறுவனின் ஜாதிப்பெயரைச் சொல்லித் திட்டியதோடு, அவனை கையால் மலத்தை அள்ள வைத்து வேறு இடத்தில் போடவேண்டும் என வற்புறுத்தினார் என சிறுவனின் தந்தை கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்துள்ளார். தனது மகனை அடித்துத் துன்புறுத்தியதாகவும், ஜாதிப் பெயரைச் சொல்லி மோசமாகப் பேசியதால் தனது மகன் மிகவும் மனம் உடைந்ததாகவும் கிருஷ்ணமூர்த்தி புகாரில் தெரிவித்துள்ளார்.


"என் மகன் வீட்டுக்கு வந்த கோலத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இழிவாகப் பேசியதோடு, மோசமாக என் மகனை நடத்தியதற்கு நியாயம் வேண்டும் என்பதற்காக பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். என் மகனுக்கு நீதி கிடைக்கவேண்டும்," என கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.


இதன்மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பது முக்கியம். காவல்துறை சரிவரக் கையாளாவிட்டால், மக்கள் பிரச்சினையாக வெடிக்கும் என எச்சரிக்கிறோம்.


No comments:

Post a Comment