ஒற்றைப் பத்தி : ‘அய்ந்து எழுத்து!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

ஒற்றைப் பத்தி : ‘அய்ந்து எழுத்து!'

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் ஒரு நூல் வந்தது. சுவாமிநாத தேசிகர் எழுதிய இலக்கணக் கொத்து என்பதே அந்நூல். இவர் தாண்டவ மூர்த்தி என்பார் மைந் தரும், நன்னூலுக்கு உரை செய்த சங்கர நமச்சிவாயருக்கு ஆசிரி யருமாக இருந்த மயிலேறும் பெருமாள் என்பவரிடம் 12 ஆண்டுகள் தமிழ் கற்றார். செப்பறைப் பதியினராகிய சிவச் செல்வர் கனகசபாபதி என்பவரி டம் வடமொழி கற்றார். மேலும் இவர் திருவாவடுதுறையில் தீட்சை பெற்று பொருள் நூல் பயிற்சியில் புலமை பெற்றார். இவ்வளவு புலமை பெற்ற இவர், சார்பாக நின்றது வைதீகக் கருத்தியலுக்குத் தான்.


தமிழ்நூற் களவிலை அவற்றுள்


ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ


அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்


றறையவே நாணுவர் அறிவுடை யோரே


ஆகையால் யானும் அதுவே அறிக


வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்


இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக!


என 5 எழுத்துக்களால் ஒரு மொழியா? என தமிழ் மொழியை இவர் குறைத்துக் கூறுகின்றார். மேலும் வடமொழி இல்லாத தனித்தமிழ் நடை இல்லை என் பதையும் சுட்டுகின்றார். இதனால் தமிழுக்கும், வடமொழிக்கும் ஒரே இலக்கணம் என்பதை இவர் நிறுவுகின்றார். இவரின் இக் கூற்றுக்கு காரணமும் இருந்தது.


அக் காலகட்டத்தில் தமிழில் வடமொழிக் கலப்பு மிகுந்திருந் தது. வடமொழியைக் கலந்து எழுதுவது மதிப்பிற்குரிய ஒன் றாகக் கருதப்பட்டது. அன்றைய தமிழ்ப் புலமைவாதிகளிடம் ஏற் பட்ட வடமொழி குறித்த மதிப் பீடே இதற்குக் காரணம். வட மொழி, அதிகார மட்டத்துடன் இணைந்திருந்தது இதற்கு முக் கியக் காரணமாகும். பேரரசு வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட இம் மாற்றம் வட்டாரக் கடவுள்களை யும், வட்டாரத் தலைமைகளை யும் போற்றும் நிலைக்குப் புலவர் களைத் தள்ளியது. இச்சூழலில் தமிழ்ப் புலமையினர் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள வட மொழியையும்,  தமிழையும் இணைத்துப் ‘பா' செய்ய வேண் டிய சூழல் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் இப்படி வடமொழி கலந்தே பேசினரா என்பதெல் லாம் நடைமுறை எதார்த்தமாக இல்லை. புலமைவாதிகளிடமும், அவர்களை ஆதரிப்பவர்களிட மும் ஏற்பட்ட மாற்றம் தமிழை யும், வடமொழியையும் ஒன்றாக் கியது என்றே கருத வேண்டி யுள்ளது.


(‘‘தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு'', பக்கம் 208-209,


சி.இளங்கோ)


வைதீகச் சூழலிலும், அதிகார மட்ட செல்வாக்கும் சேர்ந்துதான் தமிழ் என்னும் ஊற்றில் ஆரிய நஞ்சு கலந்தது என்பது இதன் மூலம் வெளிப்படை.


இதில் சுவாமிநாத தேசிகர் என்னும் ஆரிய அடிமை தனது மேற்கண்ட பாடலில்,


அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்


றறையவே நாணுவர் அறிவுடை யோரே


என்று குறிப்பிடுகின்றார்.


தமிழில் உள்ள ண, ற, ழ, எ, ஒ என்ற அய்ந்து எழுத்துகள் வடமொழியில் இல்லாததா லேயே தமிழ் சிறப்பான மொழி யாகிவிடுமோ என்ற கேள்வியில் நெளியும் கேலியும், காட்டிக் கொடுக்கும் தன்மையையும் காண்க!


- மயிலாடன்


No comments:

Post a Comment