டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- கரோனோ தொற்றுத் தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டிய பிரதமர், அயோத்தியில் ராமன் கோவில் பூமி பூஜைக்கு செல்ல திட்டமிடுவதை, தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் சாடியுள்ளார்.
- சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ‘பாலன் இல்லம் குறித்து, சில விஷமிகள் கீழ்த்தரமான பதிவுகள் இட்டதற்கு, திராவிடர் கழகமும், தி.மு.க.வும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு
- புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக, மத்திய அரசு திட்டங்களை அறிவித்தாலும், நடப்பில் அம்மக்களுக்கு உரிய பயன் சென்றடையவில்லை என அருந்ததி துரு, சந்தீப் பாண்டே ஆகியோர் தங்களது கட்டுரையில் தெரிவித்துள்ளார்கள்.
தி இந்து, டில்லிப் பதிப்பு:
- காங்கிரஸ் கட்சி தனது பழைய நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஹரிஸ் கரே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- கோவையில் சில கோயில்களில் சேதம் விளைவித்த வழக்கில், சேலத்தைச் சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.
- திருப்பதி ஜீயருக்கு கரோனா தொற்று உறுதியானதை யடுத்து, திருப்பதி கோயிலை சில வாரங்கள் மூடிட அக் கோயி லின் ஆகம ஆலோசகர் யோசனை தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லிப் பதிப்பு
- கரோனா, ஜி.டி.பி., சீன ஆக்கிரமிப்பு குறித்து பொய்யான செய்திகளை பா.ஜ.க. கூறி வருகிறது. அக்கட்சி பொய் கூறுவதை நிறுவனமாக்கி விட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா
20.7.2020
No comments:
Post a Comment