பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நூற்றாண்டு பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் சீரிய முயற்சியால் 1980 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் என்ற சிற்றூரில் கிராமப்புற மகளிருக்காக பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் மூன்று பாடப் பிரிவுகளுடன் துவக்கப்பட்டது.
பின்பு 2002 ஆம் ஆண்டு மாணவர்களும் அனுமதிக்கப்பட்டு இருபாலரும் இணைந்து கல்வி பயிலும் நிறுவனமாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி எனும் பெயரில் தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் (AICTE) அங்கீகாரம் பெற்று தன்னாட்சி அந்தஸ்துடன் (Autonomous Status) கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளுடன் இயங்கி வருகின்றது. இக்கல்லூரி வெள்ளி விழா. முத்து விழா மற்றும் பவள விழாக்களைக் கடந்து தனது கல்விப் பணியை ஆற்றி வருகிறது.
* கட்டட எழிற்கலை (Architectural Assistantship(SW))
* மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் (Electronics and Communication Engineering)
* மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ் (Modern Office Practice)
* இயந்திரவில் (Mechanical Engineering)
* மின்னியல் மற்றும் மின்னணுவியல்
(Electrical and Electronics Engineering)
* கட்டடவியல் (Civil Engineering)
* கணினியியல் (Computer Engineering)
கல்லூரியின் சிறப்பம்சங்கள்:
* ISO 9001:2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம்
* நல்ல அகலமான காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் (Spacious Class Rooms)
* நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய் வகங்கள்
* கல்வித் தகுதியோடு கூடிய அனுபவமுள்ள ஆசிரியர்கள்
* மாணவர்களின் உடல்வலிமையை மேம் படுத்த உதவும் உடற்பயிற்சிக் கூடம் (Gym)
24 மணி நேர இண்டர்நெட் வசதி 5000 நூல் களைக் கொண்ட, டிஜிட்டல் லைப்ரரி (Digital Library) வசதியுடன் கூடிய மிகப்பெரிய நூலகம் தடகள மைதானம், கூடைப்பந்து கோர்ட், டென்னிஸ் கோர்ட் மற்றும் உள்விளையாட்டு களான டேபிள் டென்னிஸ், கேரம் ஆகிய விளையாட்டுகளுக்கான வசதிகள் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி விடுதி வசதிகள்.
மாணவர் காப்பீட்டுத் திட்டம் - தமிழக அரசின் இலவச விலையில்லா மடிக்கடிணி (ECE,MOP,ARCH)
விருதுகள் :
இக்கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகளுக் காக கனடா அரசின் முதல் சர்வதேச சாதனை விருது (CIDA's Award of Excellence - 2000), தமிழ்நாட்டிலேயே சிறந்த பாலிடெக்னிக் விருது (Tamil Nadu Government Best Polytechnic Award - 2007) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக விருதுகள். நாட்டு நலப்பணித்திட்ட விருது கள், தேசிய மாணவர் படை விருதுகள் போன்ற பெருமை மிகு விருதுகளைப் பெற்றுள்ளது.
வேலை வாய்ப்பு (Placement) :
இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவி களுள் உயர்கல்வி (Higher Studies) மற்றும் தொழில் முனைவோர் (Entrepreneur) தவிர்த்து வேலைக்குச் செல்ல விரும்பும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் நேர்முகத்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது (Interview Techniques) பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இப்பாலி டெக்னிக்கில் நடத்தப்படும் வளாக நேர்காணல் (On Campus Interview) மற்றும் மற்ற கல்லூரிகளில் நடைபெறும் வளாக நேர்காணல் (Off Campus Interview) ஆகியவற்றின் மூலம் மாணவ, மாண விகள் அனைருக்கும் 100% வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகின்றது.
மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை
வழங்கிய புகழ் பெற்ற நிறுவனங்கள்:
லூகாஸ் டி.வி.எஸ்., புதுச்சேரி
(Lucas TVS, Pondicherry)
செயின்ட் கோபெய்ன். சென்னை
(Saint Gobain, Chennai)
ஏ.டி.எஸ்.அசோசியேட்ஸ், சென்னை
(A.D.S. Associates, Chennai)
அக்வா சப், கோயமுத்தூர்
(Aqua Sub, Coimbatore)
லார்சன் அண்டு டூப்ரோ, கோயமுத்தூர்
(Larsen & Toubro, Coimbatore)
மியாங் ஷின் இந்தியா, சென்னை
(Myoung Shin India, Chennai)
டி.அய். மெட்டல் பார்மிங். சென்னை
(TI Metal Forming, Chennai)
நிப்பான் ஸ்டீல்ஸ், சென்னை
(Nippon Steels, Chennai)
ராயல் என்பீல்டு அகாடமி, சென்னை
(Royal Enfield Academy, Chennai)
ஆவலான் டெக்னாஜி, சென்னை
(Avalon Technologies, Chennai)
டென்னகோ ஆட்டோமோட்டிவ். ஓசூர்
(TENNECO Automotive, Hosur)
ரானே பிரேக்ஸ் லைனிங் பிரைவேட்
லிமிடெட், சென்னை
(Rane Brakes Lining Pvt. Ltd., Chennai)
நோக்கியா சொல்யூஷன் டெக்னாலஜீஸ்,
சென்னை
(Nokia Solutions Technologies, Chennai)
No comments:
Post a Comment