யுஜிசி அங்கீகாரம் கிடைக்காததால் பி.எட் மாணவர் சேர்க்கை ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

யுஜிசி அங்கீகாரம் கிடைக்காததால் பி.எட் மாணவர் சேர்க்கை ரத்து

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு



சென்னை, ஜூலை 4- தமிழ் நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் சார்பில் பி.எட் பட்டப் படிப்பு நடத்தப்பட்டு வரு கிறது. பி.எட் பட்டப்படிப்பு ஓராண்டு படிப்பாக இருந்த வரை, தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இதற்கான அங் கீகாரத்தை வழங்கி வந்தது. தற்போது பி.எட் படிப்பு 2 ஆண்டு படிப்பாக மாற்றப் பட்டுள்ளதால் அதற்கான அங் கீகாரத்தை யு.ஜி.சி வழங்கு கிறது.


இந்த நிலையில் தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத் தின் அங்கீகாரத்தை மட்டும் தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகம் பெற்றிருந்த தால், தற்போது 2018-2019 ஆண்டு திறந்தநிலை பல் கலைக் கழகம் சார்பில் மேற் கொள்ளப்பட்ட பி.எட் மாண வர் சேர்க்கையினை ரத்து செய்ய  யு.ஜி.சி உத்தரவிட்டது.


இதனை தொடர்ந்து 2018-19ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவ தாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.


இதனையடுத்து மாணவர் கள் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என வும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 400-க்கும் அதிகமானோர் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழ கத்தில் பி.எட் படிப்பில் சேர்ந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment