முதலில் தோன்றிய மனிதன்
மானிடம் நிறுவிய முதல்வன்
எண்ணியதைப் பேச்சாக முழங்கியவன்
பேச்சினை எழுத்தாக வடித்தவன்
மில்லியன் கடந்த மொழிகளில்
தமிழை முதலாய் நிறுத்தியவன்
வாழும் நிலத்தை அய்ந்தாக்கி
வளம்காண வகையினை ஆக்கியவன்
நீர்மேல் செல்லும் நாவாய்செய்து
கடல் கடந்து பயணித்தவன்
நயத்தகு நகர நாகரீகம்
வியத்தகு வெளிநாட்டுப் பெருவணிகம்
அறம் பொருள் இன்பத்தோடு
அழியாப் புகழ் ஈட்டியவன்
காட்டுத் தனத்தின் கடைக்கோடி
கபடக் குணத்தின் முகமூடி
ஆரிய இனத்தின் வழிமாறி
பஞ்சம சூத்திர இழிவாகி
கடவுள் மதச் சேற்றுக்குள்
கரையேற முடியாமல் திணருபவன்
கழறவோ அவன்தான் திராவிடன்!
- முனைவர் அதிரடி க.அன்பழகன்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment