கரோனா வைரஸ் தொற்று காற்றின்மூலம் பரவுகிறதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

கரோனா வைரஸ் தொற்று காற்றின்மூலம் பரவுகிறதா

கரோனா வைரஸ் தொற்று காற்றின்மூலம் பரவுகிறதா?


உலக சுகாதார அமைப்பு ஆய்வுக்கு பரிந்துரை


ஜெனீவா, ஜூலை 8, காற்றில் சிறிய துகள்களில் உள்ள கரோனா வைரஸ் மக்களை பாதிக்கும் என்ப தற்கான ஆதாரங்களை 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் ஆதாரத் துடன் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளனர். உலக சுகா தார அமைப்பின் பரிந்துரைகளைத் திருத்துமாறு கேட்டு கொண்டு உள்ளனர். எவ்வாறாயினும், வைரஸ் காற்றில் உள்ள துகள் மூலம் பரவு வதற்கான சான்றுகள் நம்பத் தகுந்ததாக இல்லை என்று சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்த நிலையில், தற்பொழுது கரோனா வைரஸ் காற்று மூலம் பரவலுக்கான ஆதாரங்களை ஒப்புக் கொண் டுள்ளது.


"கரோனா வைரஸ் பரவும் முறை களில் ஒன்றாக காற்றுத்துகள்கள் (ஏரோசல்) மூலம் பரவுதல் பற்றி பரிந்துரைகளை வழங்க நாங்கள் ஆலோசித்து வருகிறோம்" உலக சுகாதார அமைப்புன் கரோனா வைரஸ்  தொற்றுநோய்க்கான தொழில்நுட்ப நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறி உள்ளார்.


No comments:

Post a Comment