செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

செய்தித் துளிகள்....

* கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவர்' எனும் மருந்து விற்பனைக்குவந்துள்ளது (100 மி.கி. ரூ.4000).


* கரோனா தாக்குதலால் பன்னாட்டு பொருளாதார வளர்ச்சி 5.2 விழுக்காடாக இருக்கும்; இந்தியாவின் வளர்ச்சியோ வெறும் 1.9 விழுக்காடாக இருக்கும் என்று பன்னாட்டு செலாவணி நிதியம் கணித்துள்ளது.


* பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை அக்டோபர் 20 வரை அவகாசம் நீட்டிப்பு!


* அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் 58 இந்தியர்களால் நிர்வகிக்கப்படுகிறது.


* இந்தியாவில் 109 வழித்தடங்களில் 151 இரயில்கள் தனியார்மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.


* இந்தியா முழுவதும் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுள் 90 விழுக்காட்டினர் தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் - மத்திய அரசு தகவல்.


* மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு - வழக்கு விசாரணை 13 ஆம் தேதி ஒத்தி வைப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு.


* கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர் ஒருவருக்குப் பிறந்த நாள் விழா - மாணவனைக் கம்பத்தில் கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டினார்களாம் (கல்லூரிப் படிப்பின் தரம் இதுதானா?)


* கல்வான் பள்ளத்தாக்கை இந்தியா இழக்கிறதா - பிரதமருக்குக் காங்கிரஸ் வினா.


No comments:

Post a Comment