மத்திய அரசு உத்தரவுப்படி செப்டம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாது தேர்வு நடத்துவதில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 13, 2020

மத்திய அரசு உத்தரவுப்படி செப்டம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாது தேர்வு நடத்துவதில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும்

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்


சென்னை,ஜூலை 13, மத்திய அரசு உத்தரவின்படி செப்டம்பர் மாதத் திற்குள் கல்லூரி செமஸ்டர் தேர்வு களை நடந்த இயலாது என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச் சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள் ளார். நாடு முழுவதும் உள்ள கல் லூரிகளில் இறுதியாண்டு தேர் வுகள் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தப் பட வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு உத்தர விட்டது.


இந்நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகள் நடத்த இயலாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி யுள்ளார்.


அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாட்டில் கரோனா பரவலை தடுக்க எனது அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர் களுக்கு பல்வேறு முறைகளை ஒருங் கிணைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது.


தமிழக அரசின் பல்வேறு திட் டங்களால் தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உள் ளது. இதன் பயனாக அதிக அளவி லான மாணவர்கள் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல் லூரிகளில் பயின்று வருகின்றனர். இவற்றில் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு கரோனா பாதிப்பு காரணமாக நடத்த முடிய வில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை செப் டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப் படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. ஆனால் மாண வர்கள் தேர்வு மய்யங்களுக்கு வருவ தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.


பல மாணவர்கள் வேறு மாவட் டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்துவருகின் றனர். மேலும் பல்வேறு காரணங் களால் ஆன்லைன் முறையில் நடத்த முடியாத சூழ்நிலையும் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல உயர்கல்வி நிறுவனங்களில் கரோனா மய்யங் களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் அறிகுறி இல்லாமல் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எனவே செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும். செப்டம்பரில் கல் லூரி செமஸ்டர் தேர்வுகள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment