அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள்மீது ஆபாச அவதூறு பதிவிடும் சமூக விரோதிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 21, 2020

அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள்மீது ஆபாச அவதூறு பதிவிடும் சமூக விரோதிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜூலை21, இந்தியக் கம் யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,


தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவரும், அரசியல் இயக்கங்களின் மூத்த தலைவரும் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப் பினருமான, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்களை  இழிவுபடுத்தும் வகை யில், சமூக அமைதியைத் சீர் குலைத்து மோதலை உருவாக்கும் தீய உள் நோக்கத்துடன் முகநூலில் சித்தரிக் கப்பட்ட ஆபாசப்படம் போட்டு அசிங்கப்படுத்தப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.


மக்கள் ஆட்சி ஜனநாயக நெறி முறையில் இயங்கி வரும் நமது அரசி யல் அமைப்பு கட்டமைப்பில் மாற் றுக் கருத்துக்கள் அனுமதிக்கப்படு கின்றன. சமூக, பொருளாதார, அரசியல் கருத் துக்களில் அறிவார்ந்த விவா தங்கள் அனு மதிக்கப்படுகின்றன. ஆனால் அண்மைக் காலமாக சில அமைப்புகள் தங்களை அனைத்துக் கும் 'மேலானவர்களாக' முன்னிறுத் துக் கொண்டு மற்றவர்கள்மீது எல்லா வடிவங்களிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதி யாகவே தோழர் இரா.நல்ல கண்ணு உள்ளிட்ட அரசியல் கட்சி தலை வர்கள் மீது சமூக ஊடகங்களில் நடத்தப்படும் ஆபாச, அவதூறு பரப்புரை தீவிரமாகி வருகின்றது . தந்தை பெரியார் ஈ.வெ.ரா., ஆசிய ஜோதி பண்டிட் ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், தோழர் இரா.நல்லக்கண்ணு உள்ளிட்ட தலை வர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீது அவதூறு பரப்புவதன் மூலம் வெறுப்பு அரசியல் வளர்க்கப்படுகிறது.


இது அரசியல் அமைப்பு சட் டத்தையும், அதன் உயிராதாரமாக இருக்கும் 'ஜனநாயக ' நடைமுறை களையும் அழித்தொழிக்கும் பேர பாயம் கொண்ட தீய செயலாகும். இதனை தமிழ்நாட்டு மக்கள் முளை விடும் போதே கிள்ளி எறிந்திட முன் வர வேண்டும். வன்முறையை தூண் டும் நோக்கத்துடன் சமூக ஊட கங்களில் மலிந்து வரும் பரப்புரைகள் மீது சட்ட ரீதியான நட வடிக்கைகளை எடுக்க வேண்டிய தமிழ்நாடு காவல் துறை உரிய காலத்தில் நடவடிக்கைகள் மேற் கொள்ளாத காரணத்தால் 'வன்முறை, வெறுப்பு அரசியலில்' ஆதாயம் தேடும் சட்ட விரோதக் கும்பல்கள் வலிமை பெற்று வரு கின்றன. மனித வாழ்வை அச்சுறுத்தி பரவி வரும் கரோனா நோய் பெருந் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் எதிர் கட்சிகளை நிராகரித்தும், உதா சீனம் செய்தும் முதலமைச்சர் பேசி வருவதும் அரசியல் களத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணமாகும்.


சமூக ஊடகங்களில் நடத்தப் படும் கோழைத்தனமான தாக்குதலை ஜன நாயகத்தில் நம்பிக்கை கொண்ட  அனைத்து அரசியல் கட்சிகளும் கண் டித்துள்ளன.  குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து  தப்பி விடாமல் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநில அலுவ லகம், பாலின சமத்துவ செயல்பாட்டாளர் மற்றும் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லக் கண்ணு குறித்த ஆபாசப் பதிவுகள் போட்டவர்கள்மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணை யரிடம் 17.7.2020 மற்றும் 20.7.2020 ஆகிய தேதிகளில் இரண்டு புகார் விண்ணப்பங்கள் நேரில் கொடுக்கப்பட் டுள்ளன.


மக்கள் எழுச்சி கொண்டு ஜன நாயக நெறிமுறைகளை, அரசியல் அமைப்பு சட்டம் உள்ளிட்ட அரசியல் அமைப்பு களை பாதுகாக்க வேண்டிய கடமையைக் காலம் முன்நிறுத்தி யுள்ளது. இதனை ஏற்று வரும் 22.7.2020 ஆம் தேதி (நாளை) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு. கழகத்தின் தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட் சிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம்


மதவெறி, ஜாதிவெறி சக்திகளை தோற்கடிப்போம். மனித மதிப்புகளை பாதுகாக்கப் பாடுபடுவோர் அனை வரும் ஒருங்கிணைந்து போராடு வோம்.  இவ்வாறு இரா.முத்தரசன் குறிப் பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment