சென்னை சட்டக் கல்லூரி மேனாள் பேராசிரியரும், பகுத்தறிவாளர் கழகத்தில் முக்கிய பங்காற்றியவரும், 'இனமானப் பேராசிரியர் வாழ்வும் - தொண்டும்' எனும் நூலின் ஆசிரியரும் (மற்றொரு ஆசிரியர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்) மாணவர் பருவந்தொட்டு திராவிடர் இயக்க சீரிய பற்றாளரும், மறைந்த இனமான பேரா சிரியர் அன்பழகன் அவர்களின் உற்ற தோழரும், உறவினருமான பேராசிரியர் மானமிகு அ.ர.சனகன் (வயது 92) இன்று விடியற்காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவருக்கு வாழ்விணையரும், மகளும், மகனும் உள் ளனர். தம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நற்றமிழ்ப் பெயர் களைச் சூட்டிய மொழி இனவுணர்வாளர், அவர் பிரிவுக்கு வருந்து கிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், நண்பர் களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.7.2020
குறிப்பு: பேராசிரியர் அ.ர.சனகன் அவர்களின் மகன் ஆட்டனத்தி அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
சென்னை கோலடியில் இன்று பிற்பகல் இறுதி நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 9445008748
No comments:
Post a Comment