ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் குறள் வெண்பா வடிவில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 11, 2020

ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் குறள் வெண்பா வடிவில்...


  1. நல்ல நண்பர்கள் வட்டம் பெரிதாகப் பெற்றவர்கள், கோடி கோடியாகப் பொருள் சேர்ந்தவர்களை விட, பலசாலிகள்; வாய்ப்பான வசதி படைத்தவர்கள்.


கோடிப் பணமும் குவித்த பொருட்களும்


ஈடில்லை நண்பர் தமக்கு,



  1. செயல் என்ற காற்று, துயரத்தைத் துரத்தித் துரத்தி அடித்து விரட்டும் மறவாதீர்.


துரத்தித் துரத்தித் துயரத்தைத் தூர


விரட்டும் செயலொன்றே காண்.



  1. வளரும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் வாக்குறுதி தவறாமல் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை ஏமாற்றம் அடையும்படி, எதையும் சொல்லி, செய்யாமல் விடாதீர்கள். குழந்தை வளர்ப்புக்கலையில் பின்பற்றப்பட வேண்டிய பால பாடங்களில் இது முக்கியம்.


சொல்லறங் காப்பதில் சோர்வின்மை கொள்வதே


நல்லதோர் பெற்றோர்க் கழகு.


14.ஏதாவது ஒரு எண்ணம், நமக்குள் ஒரு வகை வலியை உருவாக்கினால், நீங்கள் அந்த எண்ணத்தை மாற்றி, வேறு எண்ணங்களுடன் உறவாடுங்கள்.


வலிகூட்டும் எண்ணம் வளர்க்காது மாற்றி


வலுவூட்ட நல்லதை நாடு.



  1. எதையும் பதற்றமின்றிச் சலனமில்லாமல் ஓடும் சிற்றோடை போல வாழ்க்கை யைப் பார்க்கப் பழகியவரைத் துன்ப அலைகள் அலைக்கழிக்கவே முடியாது


சிற்றோடை செல்வகைச் சீராகக் கற்றோரைப்


பற்றாது துன்பம் பயந்து.



  1. எவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்தோம் என்பதில் பெருமையில்லை. வாழ்கின்ற நாட்களில் தனக்கும் பிறருக்கும் எவ்வளவு பயனுறு வகையில் வாழ்ந்தோம் என்பதே சிறப்பு.


வாழ்வைப் பயனுற வாழச் சிறப்புறும்


வாழ்நாள் தருவ தெவன்.


ஆக்கம்: சுப.முருகானந்தம், மதுரை


No comments:

Post a Comment