ஒற்றைப் பத்தி: சிறீரங்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 21, 2020

ஒற்றைப் பத்தி: சிறீரங்கம்!

சிறீரங்க அரங்கநாதனைப் பற்றிய பழைய தகவல்களைத் தெரிந்துகொண்டால், அப் படியா? என்றுதான் வாய்ப் பிளக்கவேண்டும். அதன் உண்மை தன்மை என்ன?


இதோ:


பூஜா சாரகன் என்பவர் வேள்விப் பூஜை! தளிகை போன்றவற்றைத் தொடர்ந்து நடத்தி வருபவர். இவர் தாத்தாச் சாரி என்பவரிடம்  ரூ.500-க் கோவில் கிழக்கு வாசலின் இடதுபுறம் உள்ள தசாவதார சன்னதியை விற்றுள்ளார். (கோவில் சன்னதி என்றால் நிலங்கள்தான்). விற்றவர் பின்பு வேறு சன்னதிக்குப் போய் விடுவார். திரும்ப இந்த சன் னதிக்கு வரமாட்டார். சன் னதியை வாங்கிய தாத்தாச்சாரி அந்தச் சன்னதியைத் தன் சொந் தச் சொத்துபோல் அடைத்துவிட் டார்.


தென்கலைக்காரர் விற்க, வடகலைக்காரர் வாங்குகிறார். தென்கலையாக இருந்த சாமி களின் முகங்களை உடைத்து, வடகலை போல வடிமைக்கிறார். அதாவது தென்கலை நாமம் என்பது ‘U' போல போட்டு, கீழே நீட்டியபடி (‘Y' வடிவில்) இருக்கும். வடகலை நாமம் என் பது ‘U' வடிவில் இருக்கும். இந் தத் தாத் தாச்சாரி வாங்கிய சன் னதியில் அழகிய சிலைகளில் உள்ள நாமங்கள் கீழே நீட்டிக் கொண்டிருக்கும் நாம முனை களை சிதைத்து விடுகிறார். ஆனால், இன்றுவரை மாலிக்கா பூர் உடைத்தான் என்றுதான் பேசப்படுகிறது. உண்மையில் உடைத்தது வடகலைக்காரர்கள் தான்.


இதற்கு ஆதாரம் சிலை களை உடைத்த வடகலைக்காரர் களுக்கும், தென்கலைக்காரர் களுக்கும் அரியலூர் நீதிமன் றத்தில் வழக்கு நடந்தது. நீதி மன்றம் முன்சீப் பதவியில் உள்ள ஒருவரை ‘‘தனி ஆணை யராக'' நியமித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் நீதிபதி சைவ மதத் தைச் சேர்ந்த பிள்ளை வகுப் பைச் சேர்ந்தவரை நியமிக் கிறார்கள். நீதிமன்ற ஆணையர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து அனைத்து சிலைகளையும் பார் வையிடுகிறார். அனைவரிடமும் தீர விசாரிக்கிறார். இரவு காவல் செய்யும் கோவில் காவலாளி தான் முதலில் புகார் செய்திருக் கிறார். தாத்தாச்சாரி ஆட்கள் தான் என்னை அடித்து விரட்டி விட்டு உடைத்தார்கள் என் கிறார். இருப்பினும் யார் சொல் வது உண்மை என்று தெரியாத நிலையில், விசாரித்த அடிப் படையில் தீர்ப்பு வழங்குகிறார், மிகவும் அற்புதமான தீர்ப்பு.


என்னவென்றால் எல்லாச் சிலைகளிலும் எல்லா உறுப்பு களும் நன்றாக இருக்கின்றன. மூக்கு அருகே மட்டும் சிறிதாக உடைக்கப்பட்டுள்ளது என்ப தால், இது திட்டமிட்டு செய்யப் பட்டுள்ளது.


தென்கலைநாமத்தை நீட் டும் பகுதியை எடுத்துவிட்டால், வடகலையாக தெரியும். ஆகை யால், வடகலைக்காரர்கள் தான் உடைத்தார்கள் என்று தீர்ப்பு வழங்குகிறார்.


வடகலைக்காரர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபரா தத்தை எதிர்த்து தாத்தாச்சாரி உயர்நீதிமன்றம் சென்றார். அங்கு 100 ரூபாய் விதிக்கப்படு கிறது. (ஆதாரம்: தசாவதார சன்னதி சிலையைச் சிதைத்தது 11 நபர்கள் சென்னை உயர்நீதி மன்றம் - Revision Case 485-1894 சிலையை உடைத்த தேதி 3.10.1894 இரவு).


இவ்வளவு தகவலும் - ‘‘யார் கைகளில் இந்து ஆல யங்கள்?'' (ஆசிரியர் எல்.ஜி. ரமேஷ் பாபு, இந்து அறநிலையத் துறை முன்னாள் அதிகாரி).


சிறீரங்கநாதரின் பின்னணி இதுதான். ஊரை ஏமாற்றிக் கடைசியில் மக்களுக்கு நாமம் போட்டுவிட்டார்கள்.


- மயிலாடன்


No comments:

Post a Comment