« 1918ல் மாண்டேகு செம்ஸ்போர்டு குழு சென்னை வந்தபோது - பார்ப்பனர் அல்லாதாருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று குழுவிடம் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அறிக்கை கொடுத்தனர்.
« பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கச் சட்டம் (1921)
« முதல் வகுப்புரிமை ஆணை கொண்டு வரப்பட்டது (1921).
« பஞ்சமர், பறையர் என்ற சொல் நீக்கப்பட்டது. ஆதிதிராவிடர் என்றே வழங்கப்பட வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். (1921)
« வேலை வாய்ப்பில் மட்டுமின்றி பதவி உயர்விலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற ஆணை. (1922).
« அரசுப் பணியாளர்களை நியமிக்க "ஸ்டாப் செலக்சன் போர்டு" என்ற அமைப்பை உருவாக்கியது (இன்றைய சர்வீஸ் கமிஷனுக்கு முன்னோடி).
« ஒவ்வொரு கல்லூரியிலும் 'செலக்ஷன் போர்டு' ஏற்படுத்தப்பட்டது. (1922) (அதுவரை கல்லூரி முதல்வர்களே மாணவர்கள் சேர்க்கையை நடத்தினர். பெரும்பாலும் கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பார்ப்பனர்களாக இருந்த நிலையில் இப்படியொரு அமைப்பு உண்டாக்கப்பட்டது (1922).
« மெட்ராஸ் யூனிவர்சிட்டி ஆக்ட் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக சென்னைப் பல்கலைக் கழக செனட்டில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட எல்லா வகுப்பினருக்கும், பொது நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. (1923).
« வகுப்புவாரி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு , அமல்படுத்தப்பட்டது (1928).
« அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
« மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது. மருத்துவ துறையை ஆங்கிலேயர்களின் எதிர்ப்புக்கிடையே இந்திய மயமாக்கப்பட்டது (1926).
No comments:
Post a Comment