கல்வி உரிமை சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விச்செலவை அரசே அளிக்கவேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 21, 2020

கல்வி உரிமை சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விச்செலவை அரசே அளிக்கவேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 21- கடந்த 2017--18 முதல் 2019--20 கல்வியாண்டிற்கான கல்வி உரி மைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப் படாமல் உள்ள கல்விச் செலவுத் தொகையை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2009ஆம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அந்த இடங்களுக்கான கட்டணத் தொகை, குழந்தைகளுக்கான கல்விச் செலவுத் தொகை யாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூல மாக தனியார் பள்ளி களுக்கு வழங்கப்படும்.


தமிழகத்தில், 2016--17ஆம் ஆண்டில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப் படும் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை செலவுத்தொகையாக நிர்ணயித்து தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த தொகை 2017--18ஆம்  ஆண்டில் 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு களில் மாணவர்களின் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020--21ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி யும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


அந்த மனுவில், தமிழக நிதிநிலையறிக் கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு 28,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 83 லட்சத்து 16,237 மாணவர்களுக்கு அரசு செலவு செய்கிறது. ஒரு மாணவருக்கு அரசு சுமார் 32 ஆயிரம் ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 11 ஆயி ரம் என செலவு நிர்ணயித்தது தவறு. 2017--18 முதல் 2019--20ஆம் கல்வி யாண்டு வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கான செலவுத்தொகையை மறு நிர்ணயம் செய்து, மீத தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.


இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது 2017--18 முதல் 2019--20 கல்வியாண் டிற்கான கல்வி உதவித் தொகையை ஏன் இதுவரை கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, கொடுக்கப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை 6 வாரத்திற்குள் கொடுக்க வேண்டும். அதுதொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உதவித்தொகையை 25 ஆயிரம் ரூபாயிலி ருந்து 11,000 ரூபாய் குறைத்தது  தொடர்பா கவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


No comments:

Post a Comment