புதுடில்லி, ஜூலை 22- அசாமில் தொடர்ந்து வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டு வருவதன் காரணமாக 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க் கைக்கும் வாழ்வாதாரங்களுக் கும் கடும் பாதிப்புகள் ஏற் பட்டுள்ள போதிலும், இது வரை 84 பேரி உயிரிழந்துள்ள போதிலும் மத்திய அரசோ, அசாம் மாநில அரசோ மக்க ளுக்கு நிவாரணைம் அளித் திட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காதிருப்பதற்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சி யின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:
அசாமில் மும்முறை ஏற் பட்டுள்ள வெள்ளப்பெருக் கின் காரணமாக, 35 லட்சத் திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 84 பேர் ஏற்கனவே உயிரிழந் திருக்கின்றனர். பிரம்மபுத் திரா, பாரக் மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதன் கார ணமாக, மண் அரிப்பு ஏற் பட்டு 24 மாவட்டங்களில் உள்ளமூவாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள் ளன. வெள்ளத்தால் பயிரிடப் பட்டிருந்த 1.27 லட்சம் ஹெக் டேர் நிலத்தில் விளைந்த பயிர்கள் சேதம் அடைந்துள் ளதுடன், கால்நடைகளும் கணக்கிடமுடியாத அளவிற்கு இறந்துள்ளன. ஆயிரக்கணக் கான பாலங்கள், ஆற்றின் கரையோரங்கள், வீடுகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தண்ணீரில் அடித்துச் செல் லப்பட்டுள்ளன.இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருந்த போதிலும் பாஜக தலைமையிலான அசாம் மாநில அரசு, இத்தனை ஆண்டு காலமும் ஆற்றின் கரையோரங்களை சரிசெய்யாததன் காரணமாக, அவை இந்த வெள்ளப் பெருக்கில் கடுமையாக சேதம் அடைந்துவிட்டன.
பல இடங்களுக்கு நிவா ரண உதவிகள் போய்ச் சேர வில்லை.இதுவரையிலும் மத்திய பாஜக அரசும் எவ்வித மான நிவாரணத் தொகுப்பும் அறிவிக்கவில்லை, மாநிலத் தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்கு மத்தியக் குழு எதையும் அனுப் பவும் இல்லை.அசாம் வெள் ளத்தால் பாதிப்புக்கு உள்ளா கியுள்ள ஒவ்வொரு குடும்பத் தினருக்கும் போதியஅளவுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ் வுக்கு உத்தரவாதம் செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகி றது. அசாமில் தொடர் வெள் ளத்தால் ஏற்பட்டுள்ள பிரச் சனையை தேசியப் பிரச்சனை யாக அங்கீகரித்து, போதிய நிதி விடுவித்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோருகிறது.இவ் வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
No comments:
Post a Comment