சென்னை, ஜூலை 9- இந்தியா வின் முன்னணி டிராக்டர் தயாரிப்பு நிறுவனமும், நெ.1 டிராக்டர் ஏற்றுமதியாளருமான சோனாலிகா, மீண்டும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது.
ஏற்கனவே இருந்த விற் பனையைப் போல, 2.4 மடங்கு அதிகரித்து, இதுவரை இல் லாத அளவாக, இந்தியாவில் மட்டுமே 13 ஆயிரத்து 691 டிராக்டர்களை இது விற்பனை செய்துள்ளது. இந்தத் துறை யின் வளர்ச்சி ஆண்டுக்கு 23% என்றிருக்க, சோனாலிகா இதை மிஞ்சி தற்போது 55% வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட் டும் - இது வரை இல்லாத அள வாக, 15,200 டிராக்டர்களை விற்றுச் சாதனை படைத்துள் ளது. இதனை அடுத்து,இந்திய டிராக்டர் சந்தையின் மொத்த விற்பனையில் 15.4% பங்களிப் பைப் பெற்றுள்ளது. இந்தத் துறையில் வேறு எந்த இந்திய நிறுவனமும், இந்த விற்ப னையை எட்டவில்லை. பிற தானியங்கி வாகனங்களான இரண்டு - நான்கு சக்கர வாகன நிறுவனங் களையும் சேர்த்துப் பார்த்தாலும், இந்த சவாலான நேரத்தில் அதிக விற்பனையை எட்டியுள்ள நிறுவனம் எங்க ளது சோனாலிகாதான். இது வரை இல்லாத வகையில், அதிக பட்சமாக ஜூன் மாதத்தில் மட்டும் 15,200 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளதில் மகிழ்ச் சியடைகிறோம் என இக் குழு மச் செயல் இயக்குனர் ரமன் மிட் டல் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment