செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 12, 2020

செய்தித் துளிகள்....

* கரோனா காரணமாக பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு இறுதியாண்டு பருவத் தேர்வுகளை நடத்த இயலாது - இது முதலமைச்சர் அறிவிப்பு.


* கட்டண விகித முறையால் மின்சாரக் கட்டணம் விண்ணைத் தொடரும் நிலை!


* தமிழ்நாட்டில் சித்த மருத்துவ சிகிச்சை மய்யங்கள் அதிகரிக்கப்படுகின்றன.


* சென்னையில் ‘நெமர்டியன் புழு' என்ற புதிய இன புழு கண்டுபிடிப்பு.


*  ‘பிளாஸ்மா' சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு.


* கரோனா பாதிப்பு - அரியலூர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடல்!


* சென்னையில் மட்டுமே 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கரோனா தொற்றால் உயிர் இழப்பு.


* அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கும் - எச்சரிக்கை!


* ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஒரு எம்.எல்.ஏ., ரூ.15 கோடி - பி.ஜே.பி. பேரம் - முதலமைச்சர் குற்றச்சாட்டு.


* ‘ஆப்பிள்' தொலைப்பேசிகளைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் - தமிழ்நாட்டில் ரூ.7,515 கோடி முதலீடு!


* கரோனா குறித்த தகவல்களை மூடி மறைத்துவிட்டது சீனா என்று அமெரிக்காவுக்குத் தப்பிய சீனப் பெண் விஞ்ஞானி தகவல்!


* குஜராத் மாநிலம் சூரத்தில் ரூ.4 லட்சம் வரை மதிப்பிலான வைரத்தாலான முகக்கவசம் விற்பனை.


* ராகுல் காந்தியைக் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று சோனியாவிடம் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கோரிக்கை.


* கரோனாவைக் கட்டுப்படுத்தி உலகின் கவனத்தைக் கவர்ந்தது தாராவி என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டு.


* சிங்கப்பூரில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.


No comments:

Post a Comment