செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 21, 2020

செய்தித் துளிகள்....

* இலவச கல்வித் திட்டத்தில் இளங்கலை படிப்பில் சேர நாளை முதல் இணையம் வழி விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு.


* புதுச்சேரி மாநிலத்தில் ரூ.9,000 கோடிக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்.


* திருப்பதி கோவில் ஜீயர்கள் இருவர், அர்ச்சகர்கள் 20 பேர், தேவஸ்தானப் பணியாளர்கள் 160 பேருக்குக் கரோனா தொற்று!


* நெய்வேலியில் பார்வைத் திறனற்ற மாணவி ஓவியா சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு 500-க்கு 447 மதிப்பெண் பெற்றுள்ளார் - பாராட்டத்தக்கது!


* கீழடி அகழாய்வு ரூ.12 கோடி செலவில் அகழ் வைப்பகம் உருவாகிறது.


* செவ்வாய்க் கோளை ஆராய விண்கலம் அனுப்பியது அமீரகம்.


* செப்டம்பரில் கரோனா தடுப்பு மருந்து தயார் - ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் தகவல்.


* தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.


* கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 2 டாக்டர்கள் உள்பட 12 பேருக்குக் கரோனா பாதிப்பு.


* சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு. உள்துறைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது!


* முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டித் திட்டம் - புதுச்சேரி நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு.


No comments:

Post a Comment