டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- சி.பி.எஸ்.இ. பாடத்தில் 30% பாடங்களைக் குறைக்கிறோம் என்ற பெயரில், ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, பண மதிப்பிழப்பு ஆகிய பாடங்களை நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சசி தரூர், அபிசேக் சிங்வி, சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ஆகி யோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- இணையம் வழியே கல்வி கற்பிக்கப்படும் பல்கலைக்கழகங் களில் படிக்கும் வெளி நாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்ற டிரம்ப் அரசின் உத்தரவை எதிர்த்து, ஹார்வார்டு மற்றும் மாசாசூட்ஸ் பல்கலைக் கழகங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
- அமெரிக்காவில் வேலை மற்றும் கல்வி கற்கும் வெளிநாட்டவர் களின் விசா குறித்த டிரம்ப் அரசின் அறிவிப்பு, சீன நாட்டிற்கு எதிர்ப் பாக எடுத்த முடிவு என்றபோதும், அது இந்திய நாட்டில் இருந்து சென்ற லட்சக்கணக்கானவர்களையும் பாதிக்கும் என்பதை மறந்து விடக் கூடாது என தலையங்கச் செய்தி கூறுகிறது.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- சோனியா காந்தி குடும்பத்தினர் நடத்திடும் மூன்று அறக் கட்டளைகளில் நன்கொடைகள் வருவது குறித்து ஆராய, மத்திய அமைச்சரவைக் குழுவினை உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. உண்மையைப் பேசுவோர்க்கு எதிராக இது போன்ற மிரட்டல்கள் ஒன்றும் செய்ய முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி தந்துள்ளார்.
- பிற்படுத்தப்பட்டோரில் ‘கிரிமிலேயர்’ வருமான வரம்பில், சம்பள வருமானத்தையும் சேர்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு, தமிழக முதல்வர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பழைய முறையைத் தொடரவும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பிற்படுத்தப்பட்டோரில் கிரிமிலேயர் குறித்த மத்திய அரசின் முடிவைத் திரும்பப் பெறவும், மருத்துவப் படிப்பில் அகில இந்திய கோட்டா முறையையும், நீட் தேர்வையும் ரத்து செய்ய வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:
- பசு மாட்டுச் சாணத்தை மக்களிடம் இருந்து அரசே விலை கொடுத்து பெற்றுக் கொள்ளும் என்ற சத்தீஸ்கர் அரசின் முடிவுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப் பினர், முதல்வரைச் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தனர். தாங்கள் தனிமைப்பட்டு விடுவோம் என்பதற்காக, ஆர்.எஸ். எஸ். அமைப் பினர் தன்னைச் சந்தித்துள்ளதாக முதல்வர் பூபேந்தர் பாகல் தெரிவித்து உள்ளார்.
- ராணுவத்தில் பணியாற்றுவோர், முகநூல் உள்ளிட்ட 80 இணையப் பயன்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என இந்திய ராணுவம் ராணுவத்தினர்க்கு உத்தரவிட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் மரணம் குறித்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.அய்.டி., மேலும் அய்ந்து காவலர்களைக் கைது செய்துள்ளது.
எகனாமிக் டைம்ஸ், மும்பைப் பதிப்பு:
- சீன ராணுவம் லடாக் பகுதியில் எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை பின்வாங்கியது? என்பது குறித்து மோடி அரசு பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
- ராஜீவ் அறக்கட்டளைக் குறித்து மத்திய அரசு விசாரிப்பது போல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளான, விவேகானந்தா பவுண் டேசன், ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆப் பிஜேபி, இந்தியா பவுண்டேசன் ஆகியவற்றிற்கும் எங்கிருந்து பணம் வருகிறது என விசாரிக்கத் தயாரா? என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் சிங்வி மோடி அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா, மும்பை:
- வீரேந்திர தேவ் தீட்சித், ஆசாராம் பாபு, ராதே மா, குர்மீத் ராம் ரகீம், சுவாமி அசீமானந்த், ராம்பால் போன்ற 17 சாமியார்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
- குடந்தை கருணா
9.7.2020
No comments:
Post a Comment