வாரணாசி,ஜூலை 8 பார்ப்பனர்களுக்கு மட்டுமே தகுதி திறமை இருப்பதைப்போன்று காலம் காலமாக பரப்பப்பட்டு வருகிறது. அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு நிகழ்வு. முதல் தொழில்நுட்பக் கல்லூரி தேர்வு முடிவில் முதல் அய்ந்து இடங்களில் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தவிர்த்துவிட்டு எட்டாம் இடத்தைப்பிடித்த பார்ப்பன மாணவரை பெரிதாக சாதனை செய்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதுகுறித்த விவரம் வருமாறு,
உத்தரப்பிரதேசத்தில் மாநில அளவிலான பட்டயத் தொழிற்கல்வி நுழைவுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளது, இதில் முதலிடத்தில் அலகாபாத்தைச் சேர்ந்த ராகுல் குஜான், இரண்டாம் இடத்தில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சச்சின் குமார் பிந்து, மூன்றாம் இடத்தில் வாரணாசியைச் சேர்ந்த பிரதாப் பாட்டில், நான்காம் இடத்தில் சசிகாந்த், லக்னோவைச் சேர்ந்த விபின் குப்தா அய்ந்தாம் இடமும் பெற்றார்கள்.
இதில் முதல் அய்ந்து இடங்களும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களே வந்துள்ளனர். ஆனால் இந்த செய்தியின் தலைப்பாக வெளியானது என்ன தெரியுமா? ”மாநில அளவிலான பாலிடெக்னிக் பட்டயப் படிப்பில் வாரணாசியைச் சேர்ந்த சாக்ஷி பாண்டே எட்டாம் இடத்தில் வந்து பெருமை சேர்ந்துள்ளார் என்று எழுதியுள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள பிரதீப் பாட்டில் வாரணாசியைச் சேர்ந்தவர்தான் ஆனால் அவரால் வாரணாசிக்கு பெருமை இல்லையாம், எட்டாம் இடத்தில் உள்ள பார்ப்பன மாணவியால்தான் வாரணாசிக்குப் பெருமையாம், அந்தப்பெண் ஒன்றும் இந்த பத்திரிகையாளரின் உறவினர் அல்ல, அந்த மாணவி ஒரு பார்ப்பனர் அவ்வளவே. பார்ப்பனப்பாசம் அவர்களை அப்படி ஆட்டிவைக்கிறது.
No comments:
Post a Comment