கிறிஸ்தபர் ஜெபர்லா மற்றும்
ஏ. கலையரசன்
இந்தியாவில் இடஒதுக்கீடு என்ற ஆக்கபூர்வமான பாகுபாட்டுக் கொள்கை தொழில் நுட்பங்களில் மிகுந்த பயன் அளிக்கும் ஒன்றாகவே இருந்து வந்தது. எப்போதுமே மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் வேலை வாய்ப்புத் திட்டமாக இல்லாமல் வரலாற்று ரீதியில் ஒடுக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான மிகச் சிறந்த வழியா கவே அது பார்க்கப்பட்டது.
நிரப்பப்படாத ஒதுக்கீட்டு இடங்கள்
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அளவில் மத்திய பிரிவினரின் சில அளவு கோல்களை தாழ்த்தப்பட்டவர்களின் குழு ஒன்று படிப்படியாக ஏற்றுக் கொள்ளும்படி இந்த ஆக்கபூர்வமான பாகுபாட்டுக் கொள்கை செய்தது. 1980 ஆம் ஆண்டு வரை பொதுத் துறை நிறுவனங்களில் உயர்ஜாதியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுவதுமாக நிரப்பப்படாமல் இருந்த நிலையில், மத்திய நிர்வாக பணியமைப்புத் துறையில் 1984 ஆம் ஆண்டில் இருந்த (இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 16 சதவிகித அளவில் இருந்த தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள்) சி பிரிவு பணியிடங்களில் 14 விழுக்காடும், பி. பிரிவு பணியிடங்களில் 2003ஆம் ஆண்டில் 14.3 விழுக் காடும், மத்திய பொது தொழிற் பிரிவு நிறுவனங்களின் ஏ பிரிவு பணியிடங்களில் 2015இல் 13.3. விழுக்காடும் இருந்தனர். அவர்களின் விகிதாசாரம் 2004 ஆம் ஆண்டில் 14.6 விழுக்காட்டில் இருந்து 2011ஆம் ஆண்டில் 18.1 விழுக்காடாக உயர்ந்திருந்தனர்.
மண்டல் கமிஷன் நடைமுறைக்குப் பிறகே...
கல்வி கற்ற தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் விகிதாசாரம் 1981 இல் 21.38 விழுக்காடாக இருந்தது, 2011 இல் 66.1 விழுக்காடு உயர்ந்தது. 2013ஆம் ஆண்டில் வி.பி.சிங் மண்டல் ஆணைய அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு பல ஆண்டுகள் கழிந்த பிறகு இது போன்ற உயர்வு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிடையேயும் எட்டப்பட்டது. மத்திய அரசு பணிய மைப்புப் பிரிவில் ஏ பிரிவு பணியிடங்களில் 8.37 விழுக்காட்டினரும், பி பிரிவு பணியிடங்களில் 10.01 விழுக் காட்டினரும், சி பிரிவு பணியிடங்களில் 17.98 விழுக்காட்டி னரும் அவர்கள் இருந்தனர். மத்திய பொதுத் துறை நிறு வனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர்களின் எண்ணிக்கை 2004இல் 16.6 விழுக்காடாக இருந்தது 2014இல் 28.5 விழுக்காடாக உயர்ந்தது.
தனியார்மயமாக்கலால் இடஒதுக்கீடு பாதிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் செயல் திட்டத்தினால், இதுவரை தாழ்த்தப்பட்ட பிரிவு மற்றும் பிற் படுத்தப்பட்ட பிரிவு மக்கள் பெற்று வந்த இத்தகைய அதிகப் படியான வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படக் கூடும். பொதுத் துறை நிறுவனங்கள் பற்றிய அரசின் புதிய கொள்கையின் படி, நான்குக்கும் மேற்படாத பொதுத் துறை நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கும் முக்கிய துறைகளின் பட்டியல் ஒன்று அறிவிக்கப்படும்.
நான்கிற்கும் மேற்பட்டு இருக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் அல்லது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். ஆனால், ஏற்கெனவே அரசின் மற்ற கொள்கைகளாலும், முன்னேற்றங்களாலும் இடஒதுக் கீட்டு நடைமுறை சீரழிந்து போய் வருகிறது. மேலே குறிப்பிடப்பட்ட விகிதாசாரங்கள் உயர்ந்து வரும்போது, பொதுத் துறை நிறுவனங்கள் சுருங்கிக் கொண்டே வரும் நிலையில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பணிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது அந்த போக்கு மாறுபட்டு இருப்பதைக் காணலாம். முதலாவதாக, 5.5 லட்சமாக 2006 இல் இருந்த காலிப் பணியிடங்கள் 2014 இல் 7.5 விழுக்காடாக உயர்ந்தன.
சிவில் சர்வீஸ் பணியாளர்கள் நியமனத்திற்காக தயார் செய்யப்பட்ட சுருக்கப்பட்டியலில் 2014 மற்றும் 2008 ஆண்டுகளுக்கிடையே ஏறக்குறைய 40 விழுக்காடு பணியிடங்கள் குறைக்கப்பட்டன. மத்திய அரசின் பணியமைப்பில் 2003 ஆம் ஆண்டில் 32.59 லட்சமாக இருந்த பணியிடங்கள் 2012 ஆம் ஆண்டில் 26.30 லட்சமாகக் குறைந்தது. இட ஒதுக்கீட்டினால் பயன்பெறும் தாழ்த்தப்பட்டவர்களின் எண் ணிக்கை 16 விழுக்காடு குறைந்து போனது. மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் 2011 ஆம் ஆண்டில் 18.1 லட்சமாக இருந்த பணியிடங்கள் 2014ஆம் ஆண்டில் 14.85 லட்சமாகக் குறைந்து போனது.
இதற்கு மாறாக, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர் களின் எண்ணிக்கை, தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. மத்திய அரசு பணியமைப்பு பணியிடங்களில் 2003 ஆம் ஆண்டில் 1.38 லட்சமாக இருந்தது 4.55 லட்சமாக 2012 இல் உயர்ந்தது. ஆனால் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டில் 14.89 லட்சமாக இருந்தது 2008இல் 23 .55 லட்சமாக உயர்ந்தது. அதற்கு அடுத்த ஆண்டு அது 23.38 லட்சமாகக் குறைந்து போனது. மத்திய அரசின் இணைச் செயலாளர் அளவில் தனியார் நிறுவனங்களில் இருந்தும், வெளிச் சந்தையில் இருந்தும் ஆட்களை நியமிக்கும் நடைமுறை மூலம் 10 இணைச் செயலாளர் பணியிடங்களில் நியமனம் செய்வதற் கான ஆட்கள் 2019 ஆண்டில் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
சீரழிக்கப்படும் இடஒதுக்கீடு நடைமுறை
இந்த நியமனங்களில் கோட்டா என்னும் இட ஒதுக்கீடு பொருந்தாது என்பதால், இந்த புதிய நடை முறையின் மூலம் இட ஒதுக்கீட்டு நடைமுறை சீரழிந்து போனது.
இடஒதுக்கீட்டு நடைமுறையின் சீரழிவுக்கு இந்திய நீதித் துறையும் தனது பங்களிப்பை அளித்து உள்ளது. பல்கலைக் கழக அளவில் இட ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை மாற்றி துறை வாரியாக இட ஒதுக்கீடு அளிப்பதற்கான நடை முறை அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்படுத்தப்பட்டு, அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் பின்னர் ஏற்றுக் கொள்ள வும் பட்டது. இத்தகைய மாற்றம் இடஒதுக்கீட்டுப் பணியிடங்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. இதன் காரணம் ஒரு சில இடங்கள் மட்டுமே உள்ள துறைகளில் இட ஒதுக்கீட்டுக்கான பணியிடங்களைப் பிரிக்க முடி யாத நிலை இருந்ததே இதன் காரணம். என்றாலும், இந்தத் தீர்ப்பை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப் பட்ட அவசர சட்டமும், அதைத் தொடர்ந்து கொண்டு வரப் பட்ட மசோதாவின் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோருவது ஓர் அடிப்படை உரிமையல்ல என்று அண்மையில் உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. 1995 இல் பி.வி.நரசிம்மராவ் அரசால் கொண்டு வரப்பட்ட அரசமைப்பு சட்ட திருத்தத்தில் வழங்கப்பட்ட பயன்பாட்டை இந்தத் தீர்ப்பு சீரழித்துவிட்டது
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பதவி உயர் விலும் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அனுமதிக்க உச்ச நீதிமன் றத்தால் 1992 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முடிவின் வடிவத்தை மாற்றுவதாக அந்த சட்ட திருத்தம் இருந்தது. அதனையடுத்து 85 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் மத்திய பா.ஜ.க. கட்சியின் வாஜ்பாயிஅரசு, 1995 ஆம் ஆண்டில் அரசமைப்பு சட்டத்தின் 16 (4 ) பிரிவை மேலும் செம்மையாக்கியது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக பதவி உயர்விலும் பணிமூப்பின் அடிப்படையில் அமைந்த இட ஒதுக்கீட்டுப் பயன்களை அளிப்பதற்கு இது விரிவுபடுத்தியது. இந்த முறை நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதில்லை என்று அரசு முடிவு செய்தது.
முறையாக நடைமுறைப்படுத்தப்படாத
27 விழுக்காடு
இட ஒதுக்கீடு பற்றி மிக அண்மையில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு அரசு எவ்வாறு பதில் அளிக்கப்போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும். மண்டல் குழுவினால் பரிந்துரைத்து நடை முறைப்படுத்தப்பட்ட இதர பிற்படுத்தப் பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாக ஓர் ஒழுங்கு முறையில் நடைமுறைப்படுத்தப்படாததற்காக மத்திய சுகாதார அமைச்சகத்தின் மீது கூறப்படும் குற்றச்சாட் டுக்கு பதில் அளிக்கும்படி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையம் தாக்கீது ஒன்றை கடந்த மாதத்தில் சுகாதார அமைச்சகத்துக்குஅனுப்பியுள்ளது. மாநிலங்களின் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் இடங்களில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு 2017 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்படாமல் உள்ளது.
இவ்வாறு இட ஒதுக்கீட்டு நடைமுறை மறுக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசின் இதர கொள்கை களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எடுத்துக் காட்டாக மத்திய வரவு-செலவு திட்ட நிதி அறிக்கையில் தாழ்த்தப்பட்டவர் களின் கல்விக்காக முன்னர் ஒதுக்கப்பட்டு வந்த நிதி நரேந்திர மோடி முதல் முறை பிரதமராக இருந்தபோது குறைக்கப் பட்டது. இந்த நிதி ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை அடர்த்தியின் விகிதாசாரத்திற்கு ஏற்றபடி 16.6 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அது 6.5 மற்றும் 9 விழுக்காடுகளுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. இதன் விளைவாக அவர் களுக்கான படிப்புதவித் தொகைக் கான நிதி ஒதுக்கீடு பெரும் அளவில் குறைக்கப்பட்டது.
ஆக்கபூர்வமான பாகுபாடு காட்டுவது என்ற கொள்கை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுவது தாழ்த்தப்பட் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் பெற்றுள்ள அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அமைவதாக இருந்து வந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளால் மத்திய அரசின் மீது அழுத்தம் தர இயன்ற நேரங்களில், குறிப்பாக அவர்கள் மத்திய ஆளும் அரசில் பங்கெடுத்துக் கொண் டிருந்த நேரங் களில், தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத் தப்பட்ட பிரிவு மக்கள் தங்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டுப் பயன்களைப் பெற்று வந்துள்ளனர்.
இந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவு காரணமாக உயர்ஜாதியினர் சட்ட மன்றங்களில் அதிக அளவில் இடம் பெற முடிந்தது என்பது மட்டுமன்றி, தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு ஆதரவான கொள்கைகளைப் பற்றி பல கேள்விகள் எழுப்பப்படவும் செய்யப்பட்டது.
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment