தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் இரங்கல்
இராஜபாளையம், ஜூலை 30- விருதுநகர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இராஜ பாளை யம் இல.திருப்பதி அவர்களின் தாயார் திருமதி இல.ஜெயலட்சுமி அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று (29-7-2020) மாலை 4.30 மணியளவில் மறைவுற்றார்.
தகவலறிந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இல. திருப் பதியிடம் தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு அவருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், விருது நகர் தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., விருதுநகர் தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தென்மாவட்டப் பிரச்சாரக்குழுத் தலைவர் தே.எடிசன்ராசா, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் மதுரை வா.நேரு, பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் நல்லதம்பி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆதவன் ஆகியோர் தொலைப் பேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தனர்.
இறுதி நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைத் செயலாளர் இராசா அருள்மொழி, ம.தி.மு.க. நகர செயலாளர் வி.எஸ்.இராசா, ம.தி.மு.க. அவைத்தலைவர் இன்பமணி, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் கணேஷ், தி.மு.க. துணைத் செயலாளர் சரவணன், பாரத், மாரிமுத்து, இமஷா, இராசபாளையம் நகர திராவிடர் கழக தலைவர் பூ.சிவக்குமார்-மகேஸ்வரி, திருவில் லிப்புத்தூர் நகர செயலாளர் இரா.கோவிந்தன், கார்த்திகா, முருகன், நவபாரத் கணேசன், தி.மு.க. இராஜன், அருள் உள்ளிட்ட பல்வேறு கட்சி பொறுப்பாளர் தோழர்கள் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர் இரவு 7.30மணியளவில் உடல் எரியூட்டப்பட்டது
No comments:
Post a Comment