தருமபுரி மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நடைபெற்ற ‘பெண்களின் பார்வையில் பெரியார்’ கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 14, 2020

தருமபுரி மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நடைபெற்ற ‘பெண்களின் பார்வையில் பெரியார்’ கருத்தரங்கம்


தருமபுரி ஜூலை 14- தருமபுரி மாவட்ட  கழக மகளிரணி, -திராவிடர் மகளிர் பாசறை சார்பில் 'பெண்களின் பார் வையில் பெரியார்' என்னும் தலைப் பில்  கருத்தரங்கம் 25.6.2020 அன்று  மாலை 6.30 மணிக்கு  காணொலி மூலம் சிறப்பாக நடைபெற்றது .


கருத்தரங்கிற்கு  நளினி, விஜயா பாலன் இணைந்து தலைமை ஏற்ற னர். மாவட்ட மகளிரணிச் செயலா ளர் த.முருகம்மாள் வரவேற்புரை ஆற்றினார்.


 மாநில மகளிரணி செயலாளர் தகடூர்  தமிழ்ச்செல்வி துவக்கஉரையில் குறிப்பிட்டதாவது.


தந்தை பெரியார் அவர்கள், "எனக்கு மட்டும் ஒரு பெண்பிள்ளை இருந்திருந்தால் அந்தப் பெண்ணை ஒரு தாழ்த்தப்பட்ட தோழரைக் காதலிக்கச் செய்து அவருக்கே மண முடித்து இருப்பேன்" என்று ஜாதி ஒழிப்பு உச்சத்தில் நின்று முழங்கியவர்.


அதேபோன்று அவருடைய கொள்கைப் பாதையில் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இருபெரும் அங்கங்களாக இருக்கின்ற பிற் படுத்தப்பட்ட, பட்டியலின சமூகங் களைத் தன்னுடைய இரண்டு கண் களாக பாவித்து இன்றைக்கு வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.


விடுதலை ஏட்டில் அன்று வந்த இரண்டு அறிக்கைகள் இதனை மிகச் சரியாகபறைசாற்றுகின்றன. பிற்படுத் தப்பட்ட சமூகத்தின் சமூக அநீதியான 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டதை எதிர்த்துக் குரல் கொடுக் கிறார். அதே இதழில் உடுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில் ஒரு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட வில்லை என்பதையும் சுட்டிக்காட்டு கிறார். திராவிடர் கழகம் என்பது ஒரு ஜாதி ஒழிப்பு இயக்கம் என்ற கருத்தை முன்வைத்துப் பேசி  துவக்க உரை ஆற்றினார்.


பெண்ணுரிமைக் காவலர்


பெண்ணுரிமைக் காவலர் என்ற தலைப்பில் உரையாற்றிய தோழியர் இந்திரா காந்தி பேசுகையில், இந்த நாட்டில் விதவைத் திருமணத்தை மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். அவருக்கு


பெரியார் பட்டம் பெண்களால் வழங்கப்பட்டது எவ்வளவு பெரிய பெருமை என்பதை  சுட்டிக்காட்டியும்,  தமிழ்நாட்டில் வாழப்பாடி அருகே உள்ள ஆலங்கரை, நெய்யமலை, அக் கரைப்பட்டி என்ற மூன்று கிரா மங்கள் விதவைகள் இல்லாத கிராம மாகத் திகழ்கிறது என்ற புள்ளி விவ ரத்தையும் எடுத்து வைத்து சிறப்பாக பேசினார் .


தொடர்ந்து தொலைநோக்காளர் தந்தை பெரியார் என்னும் தலைப்பில் ஆசிரியர் சோபியா அவர்கள் பேசுகை யில்,


தந்தை பெரியார் தொலை நோக்குச் சிந்தனையோடு விளங்கிய தால்தான் தனக்கு பிறகு இயக்கத்தின் தலைமையாக அன்னை மணியம்மை யார் அவர்கள் வரவேண்டியதற்கான ஏற்பாடுகளை செய்தார். அன்னை மணியம்மையாருக்குப்பின் இயக்கம் தமிழர் தலைவர் அய்யா அவர்களால் வழிநடத்தப்பட்ட  காரணத்தினால் தான் இன்றைக்கு திராவிடர் கழகம் என்கின்ற இந்த சமுதாய இயக்கம், யாராலும் அசைத்துப் பார்க்கவோ, ஆட்டிப்பார்க்கவோ  முடியாத அளவிற்கு வலிமையாக இருக்கிறது என்றால் தந்தை பெரியாரின் தொலை நோக்குச் சிந்தனைதான் காரணம். பார்ப்பனர்கள் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக முடியாது என்பதை ஒரு அடிப்படை விதியாக வைத்ததன் மூலம்,   திராவிடர் கழகம் என்கின்ற  சமுதாய இயக்கம், பார்ப்பனத் தொற்று எதுவும் ஏற்பட்டு விடாமலும், பார்ப்பனர்கள்  ஊடுருவி இயக்கத்தை அழித்து விடாமலும் பாதுகாப்பதில் தந்தை பெரியாரின் தொலைநோக்கு தெளிவாக தெரி கிறது என்று குறிப்பிட்டார்.


மூடநம்பிக்கை ஒழிப்புப் போரா ளியாக தந்தை பெரியார் என்னும் தலைப்பில் தோழியர் சங்கீதா பேசுகையில், விதவைப் பெண்களை பார்ப்பதே கூட தீட்டு என்று ஒரு மிகப்பெரிய மூட நம்பிக்கை நிலவிய காலத்தில் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குரல் உயர்த்தியவர் தந்தை பெரியார்.   தன்னுடைய வீட் டிலேயே,  தன் தங்கை மகளுக்கு  விதவைத் திருமணத்தை நடத்திக் காட்டினார் தந்தை பெரியார்.


கொள்ளி வைப்பதற்கு ஓர் ஆண் பிள்ளை வேண்டும் என்பதற்காகவே ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கி யத்துவம் கொடுத்து வளர்ப்பதும், பெண் குழந்தைகளைப் பிறந்தவுடனே கொல்லுவதும் எவ்வளவு கொடு மையான மூடநம்பிக்கை என்றும், பெண் பிள்ளைகள் கொள்ளி வைத் தால் சிதை விறகுகள் எரியாதா? என்ற கேள்வியை முன்வைத்தும்  உரையாற் றினார்.


சமூகநீதியின் வரலாறாக தந்தை பெரியார்


சமூகநீதியின் வரலாறாக தந்தை பெரியார் என்னும் தலைப்பில்  தோழியர் கவிதா பேசுகையில், 1901 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி படித் தவர்களின் எண்ணிக்கை வெறும்


1 சதவீதமே! கல்வி உள்ளிட்ட எல்லாத் தளங்களிலும் பிறப்பின் அடிப்படை யில் மட்டும் மறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும், அதே பிறப்பின் அடிப்படையில் மீட்டெடுக்கும் உரிமைதான் சமூக நீதி என்று தந்தை பெரியார் ஒரு மிகப்பெரிய புரட்சியை நடத்தியுள்ளார். அவ்வாறு மீட்டெ டுக்கப்பட்ட உரிமைதான் வகுப்புவாரி உரிமை. இந்த வகுப்புவாரி உரிமையை பாதுகாக்க வேண்டிய போராட்டத் தின் மிகப்பெரும் எழுச்சியால்தான் அரசியல் சட்டம் முதல் முதலாக 1950 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது என் பது ஒரு மாபெரும் சமூக நீதி வரலாறு. தந்தை பெரியாரின் வழியில் தமிழர் தலைவர் அவர்கள் தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாப் பாக ஒன்பதாவது அட்டவணையில் இணைத்தது என்பது இந்தச் சமூகநீதி வரலாற்றின் மாபெரும் மகுடம் என் பதை எடுத்துரைத்து  உரையாற்றினார்.


கடவுள் மறுப்பாளராக தந்தை பெரியார் என்னும் தலைப்பில் அகிலா எழிலரசன் பேசுகையில்,


சார்லஸ் டார்வின் அவர்களின் பரிணாமக் கொள்கை, எல்லா மதங் களும் கூறுவதைப்போல் கடவுள் இந்த உலகத்தைப் படைக்கவில்லை என்ற அறிவியல் கருத்திற்கு  வலு சேர்க்கிறது . மனப்பிரமை நோய் (Illusion) ஒருவருக்குப் பிடித்திருந்தால் அது மன நோய் எனவும் அதுவே ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டத்திற்குப் பிடித்திருந்தால் அது மதம் எனவும், மதத்திற்கான விளக்கத்தை அளித்தும், பிரார்த்தனை செய்தால்தான் கொடுக்கும் என்றால் கடவுள் என்ன கொடுக்கல்-வாங்கல் வியாபாரியா? எனவும்,  தந்தை பெரியாரின் அடிப் படைக் கொள்கையான ஜாதி ஒழிப்புத் தத்துவத்திற்கு மதங்களும், கடவுளும் தடையாக குறுக்கே சென்றதால்தான்  கடவுளை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அந்த அடிப்படையில்தான் கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று கூறினார் என்றும்,  பெண் என்றால் கடவுள் மறுப்பு என்ற ஒரு சமன்பாடு நிரந்த ரமாக உருவாகிய நிலையில் இந்த உலகே பகுத்தறிவு உலகாக மாறும் என்றும் கூறினார்.


ஜாதி ஒழிப்பாளராக தந்தை பெரியார்


ஜாதி ஒழிப்பாளராக தந்தை பெரியார் என்னும் தலைப்பில் தேன் மொழி பேசுகையில்,


இந்த சமூகத்தில் நடக்கும் அத் தனை இழிவுகளுக்கும் காரணமாக இருப்பது ஜாதி. ஜாதி ஒழிய வேண்டும் என்றால் வர்ணாசிரம நான்கு அடுக்கு முறை ஒழியவேண்டும் என் றும் ஜாதியத்தை ஒழிப்பதுவே தன் முக்கியமான வேலை. அதற்கு இடை யூறாக கடவுள் வந்தாலும் கொண்டு வரப்பட்டாலும் அதை ஒழிப்பது தான் தன்னுடைய வேலை என்று போராடியவர் தான் நம்முடைய ஜாதி ஒழிப்புப் போராளி தந்தை பெரியார்.


வர்ணாசிரமத்தின் அத்தனை அடுக்குகளுக்கும் கீழாக இருக்கின்ற பெண் ஜாதி என்கிற அந்த  நிலையை மாற்றி அமைப்பதும் ஜாதி ஒழிப்பு ஒரு முக்கியமான பணி என்றும் அதற்காகக் கடுமையாகப் போரா டியவர் தந்தை பெரியார் என்றும் குறிப்பிட் டார்.


உரத்தநாடு இரா.குணசேகரன் உரை


‘86 ஆண்டில் விடுதலை’ என்ற தலைப்பில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்பு உரையாற்றுகையில், திராவிடர் கழகம் என்ற அமைப்பு தான் பெண் களை மிக உயரமாகவும் மரியாதை யாகவும் நடத்துகின்ற ஒரே இயக்கம். தந்தை பெரியார் அவர்களு டைய மறைவிற்குப் பிறகு வீரமிக்க புரட்சி வீராங்கனையான அன்னை மணியம் மையாரைத் தலைமை ஏற்கு மாறு ஏற்பாடுகள் செய்தார்.


அதனைத்தொடர்ந்து தலைவராக பொறுப்பேற்ற தமிழர் தலைவர் அவர்களும் தந்தை பெரியாரின் வழியில் பெண்களுக்கு இயக்கத்தில்  மிக உயரிய இடங்களை அளித்துப் பெருமைப்படுத்தினார். அந்த அடிப் படையில் நம் தருமபுரி மாவட்டத்தின் மருமகளாக இருந்த, நம்முடைய நினைவில் வாழும் மருத்துவர் பிறை நுதல்செல்வி அம்மா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொருளாளர் என்ற  மிக உயர்ந்த பொறுப்பை அளித்து பெருமைப்படுத்தினார்.


போராட்டம் எங்கள் ரத்த ஓட்டம், இலட்சியத்தை காணாமல் ஓயமாட்டோம் என்று துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் இயற்றிய பாடல்களில் கிளம்புகின்ற  உற்சாகத்தோடு இந்த இயக்கத்தை  ஊரடங்கு காலத்திலும் சிறப்பாக இணையவழியில்  தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்திக் கொண்டிருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் என்று கூறினார்.


திராவிடர் கழகத்தில் இயங்குகின்ற  பெண்களின் துணிச்சல் என்பது ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான துணிச் சல் என்று பாராட்டினார். மதுரை அன்னத்தாயம்மாள் தேவசகாயம், திருவாரூர் ராஜலட்சுமி மணியம் போன்ற முதுபெரும் மகளிர் தோழர் களின் அந்தக்கால இயக்கப் பணியை வெகுவாகப் பாராட்டினார். அந்த மகளிர் தோழர்கள் முன்னெடுத்த நாகப்பட்டினம் மாநாட்டில்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு ‘இனமானப் பேரொளி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது என்பதை நினைவுகூர்ந்தார்.


அதேபோல மறைந்த அம்மையார் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்கள், தன்னுடைய மரண சாசனத்தில், தான் இறந்த பிறகு தன்னுடைய உட லுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக என் உடல் அருகில் வைக்கப்பட்ட உண்டியலில் மாலை வாங்குகிற பணத்திற்குப் பதிலாக  பணத்தைப் போடுங்கள் . அதில் சேர்கின்ற பணம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் துக்கு அளிக்கப்பட வேண்டும் என்று எழுதியதை ச் சிறப்பாக நினைவு கூர்ந் தார்.


தொடர்ந்து விடுதலை இதழ் என்பது திராவிடர் கழக இயக்கத்தின் சமூக நீதி வரலாற்றில் ஒரு மாபெரும் அங்கமாகத் தொடர்ந்து பயணித்து வருவதை மிகச் சிறப்பாக குறிப்பிட் டார்கள். அதில் தமிழர் தலைவர் அவர்கள் அறிக்கை  என்பது எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் இயக்கத் திற்கும் இல்லாத ஒரு பெருமை மிக்க வரலாறு என்பதையும் குறிப்பிட்டார்.


 மூதறிஞர் ராஜாஜி அவர்கள், விடு தலையும் தந்தை பெரியாரும் என்னு டைய அன்பான எதிரிகள் என்று குறிப்பிட்டு விடுதலை என்பது எப் படி ஒரு இந்துத்துவ சித்தாந்தத்திற்கு எதிரான  ஒரு போராளியாக விளங்கி யது என்பதையும் நினைவு கூர்ந்தார்.


கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்  இன்பக்கனி பேசுகையில், தமிழர் தலைவர் வேண்டுகோளின்படி   பெரியாரியல்  வகுப்புகளை மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை  சிறப்பான விளக்கத்தோடு உரையாற்றினார்.


மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் பேசுகையில், விடுதலை வளர்ச்சியில் நாம் தோள் கொடுக்க வேண்டியது ஒரு வரலாற்றுக் கடமை என்பது மட்டுமல்ல, நமக்கா கவே ஓய்வின்றி பயணிக்கும் நம் தமிழர் தலைவருக்கு நாம் அளிக்கும் நன்றிக்கடன் என குறிப்பிட்டார். பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன் பேசு கையில், ஆண்களைப் போலவே மக ளிர் பேச்சாளர் பட்டியலும் தயாராகி வருவதை பெருமையோடு பாராட் டினார்.


இறுதியாக ஆசிரியர் ஜீவிதா  நன்றியுரையாற்றினார்.


கலந்து கொண்டவர்கள்


சென்னை வெற்றிச்செல்வி, கலைச் செல்வி, ரமாபிரபா, ஈஸ்வரி  சடகோ பன், முனைவர் செய்யாறு தமிழ் மொழி, குமுதா கருணாநிதி, மணி யம்மை, லீலா கருணாநிதி, தேவிகா சுந்தரம், பெரியார் புத்தக நிலையம் சுமதி, வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த் தினி, அனிதா ஜெகன், எஸ்.பி வளர் மதி, செல்வி செல்வம், தென்னரசி, தேவிகா சுந்தரம் மற்றும் தோழர்கள் இராசாதிராசன் ராசா, ஆத்தூர் செல்வம், நா.சிலம்பரசன் சூளகரை, தங்க.ரமேஷ்குமார் பிரான்ஸ், சு.வன வேந்தன், அரும்பாக்கம் சா.தாமோ தரன், இசையின்பன், கு.சோமசுந்தரம்,  சி.சாமிநாதன், கல்பாக்கம் இராமச்சந் திரன், கதிர் தர்மபுரி, அரியமுத்து, மா.செல்லதுரை, கோவிந்தசாமி, கண் ணன், கரு.பாலன், மருத்துவர் ஜெகன் பாபு, தாம்பரம் நாத்திகன், பிரபு முத்துசாமி, சாமி சமதர்மம், ஆ.செ.செல்வம், அரங்கநாதன், அன்பரசன், ஞானசேகரன், செல்வராஜ், திருத் துறைப்பூண்டி கிருஷ்ணமூர்த்தி, திரு நாவுக்கரசு, பா.செங்கதிர், வண்டி ஆறுமுகம், மாரி கருணாநிதி,


வடலூர் இந்திரஜித், ஜூலியஸ், ஜி.பிரதாப்சிங், வேங்கடராஜா, கா.மாணிக்கம், தென்மாறன், தங்கராஜ், பவுன் ராஜா, ரோஜா, ஆர்.சங்கர், குழ.செல்வராஜ், தஞ்சை சி.அமர்சிங், அன்புச்செழியன், இந்திரஜித், தர்மபுரி  க.கதிர், வேலூர் மண்டலத் தலைவர்  வீ.சடகோபன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர்  சி. எழிலரசன்,  தர்மபுரி மண்டலத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் யாழ்.திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment