சென்னை, ஜூலை 1- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 28.06.2020 அன்று மாலை 5.00 மணிக்கு காணொலி வாயிலாக மாநிலத் துணைத் தலை வர் தரும.வீரமணி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. பகுத்த றிவாளர் கழக பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச் செல்வன் அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார்.
தொடக்கவுரை நிகழ்த்திய பகுத் தறிவாளர் கழகத் தலைவர் மா. அழகிரிசாமி கரோனா ஊர டங்கு கால கட்டத்தில் பகுத்தறிவுக் கருத் துகளை பரப்புவதற்கு இது போன்ற காணொலிக் கூட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தியதோடு தொடர்ந்து ஞாயிறு தோறும் இது போன்ற கருத்தரங்கங்கள் நடை பெறும் என்று அறிவித்தார்.
தலைமையேற்று உரையாற்றிய பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் தரும.வீரமணி நிகழ்ச்சியில் திறனாய்வு நிகழ்த்த வுள்ள நூலான பழ.அதியமான் எழுதியுள்ள வைக்கம் போராட்டம் என்ற நூலின் சிறப்பு பற்றியும் திறனாய்வாளர் மருத்துவர் திரு நாவுக்கரசன் மனோரஞ்சிதம் அவர் களின் ஆய்வுரை சமூகத்திற்கு எவ் வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் எடுத்துரைத்தார்.
நூல் திறனாய்வாளர் மருத்துவர் திருநாவுக்கரசர் மனோரஞ்சிதம் அவர்கள் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் என்ற நூலி னைப் பற்றிய தனது ஆய்வுரையில், போராட்டம் எதற்காக யாரால் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குத் தந்தை பெரியாருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, பெரியாரின் பங்கு, பெரி யாருக்கு மூன்று முறை சிறைவாசம், அன்னை நாகம்மையாரின் பங்க ளிப்பு, போராட்டத்தை வலுவிழக் கச் செய்ய மத்திய காங்கிரசார் செய்த சூழ்ச்சிகள், காந்தியாரின் பாராமுக மும் தவறான வழி நடத்தல்களும், இறுதியில் பெரியார் எப்படி வென் றெடுத்தார் என்பது வரை மிகத் தெளி வாக நூலில் உள்ள பல குறிப்புகளு டன் 45 நிமிட நேரம் உரையாற்றிய தோடு பங்கேற்பாளர்களின் கேள்வி களுக்கும் விளக்கமளித்தார்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அறிவியலாளர் அ.தா. சண்முகசுந்தரம் தனது நன்றியுரையில் இந்தப் புத்த கத்தை அனைவரும் வாங்கி, பொது மக்களுக்கு பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டதுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் மாநிலத் துணைத் தலைவர்கள் மானமிகுவா ளர்கள் புதுச்சேரி கு.ரஞ்சித்குமார், தஞ்சாவூர் கோபு.பழனிவேல், மத் தூர் அண்ணா சரவணன், விருது நகர் நல்லதம்பி, ராயகிரி கே.டி.சி குருசாமி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி மற் றும் பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment