திருப்பதி தேவஸ்தானத்தில் 17 பேருக்கு கரோனா
திருப்பதி, ஜூலை 5 தேவஸ்தா னத்தில் பணியாற்றும் அர்ச்சகர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், தடுப்பு நடவடிக் கைகள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் கரோனா வைரஸ் தொற்று பர வலைத் தடுக்க மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் அறங்காவ லர் குழு தலைவர் சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
திருப்பதி தேவஸ்தானத்தில் அர்ச்சகர்கள் உள்பட 17 ஊழி யர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கள் அனைவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இனிமேல் ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு ஷிப்ட் என்ற அடிப்படையில் பணிபுரிய உள்ளனர்.
தமிழகம், மகாராட் டிரா, டில்லி போன்ற மாநி லங்களில் தற்போது தொற்று அதிகரித்து உள்ளது.
தயவு செய்து சிவப்பு மண் டலம், கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் உள்ள பக்தர் கள் திருமலைக்கு வரவேண் டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment