சமூகநீதிக்கான அறப்போராட்டம் தோழர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 13, 2020

சமூகநீதிக்கான அறப்போராட்டம் தோழர்களே!

சமூகநீதிக்கான நான்கு அம்சங்களை வலியுறுத்தி வரும் 15.7.2020 புதன்காலை 10 மணிக்கு திராவிட மாணவர் கழகம் சார்பில் அனைத்து ஊர்களிலும் அறப்போராட்டம் நடை பெறும்.



  1. ‘நீட்' தேர்வை ரத்து செய்க!

  2. சுகாதார, மருத்துவ உதவி ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு அளிப்பதை அடிப் படை உரிமையாக்குக!

  3. தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு தருக!

  4. மத்திய தொகுப்பில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீட்டைத் தாமதிக்காதே!

  5. மருத்துவக் கல்லூரி இடங்களை மத்திய அரசின் தொகுப்புக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய அவசிய மில்லை.


மேற்கண்ட சமூகநீதிக்கான அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வரும் 15 ஆம் தேதி கழகத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள அறப்போராட்டத்தில் கழகத் தோழர்கள் - மாணவர்கள் - பெற்றோர்கள் பெரு மளவில் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


அன்று காலை 10 மணிக்கு அவரவர் வீட்டுமுன், முகக் கவசம் அணிந்துகொண்டு தனி நபர் இடைவெளி விட்டு, பதாகைகள் ஏந்தி, கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அறப்போராட்டத்தினை நடத்துமாறு கேட் டுக் கொள்கிறோம்.


இது வெறும் கட்சிப் போராட்டமல்ல - சமூகநீதியில் ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள் பங்கேற்கலாம்!


 


- கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


11.7.2020


No comments:

Post a Comment