உலக மருத்துவர் நாளில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

உலக மருத்துவர் நாளில்!


இன்று (1.7.2020) உலக மருத்துவர்கள் நாள்!


உயிர் காக்கும் உத்தமத் தொண்டறம் புரிவோருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!


அதிலும் இந்தக் கரோனா தொற்று காலகட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல்,


‘‘எம்முடையது தொழில் அல்ல; தொண்டறமே!


எமக்குத் தேவை புகழ் அல்ல!  நோயினின்று மீண்டார் என்ற மகிழ்வே எம் பெருவருவாய்!''


என கால நேரம் கருதாது உழைக்கும், கடமைக்குரிய கண்ணிய வான்களே!


‘குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்ற குறளுக்கேற்ப குன்றாத உழைப்பையும், துவளாத கடமையைச் செய்யும் எமது கிடைத்தற்கரிய மருத்துவச் செல்வங்களே, உங்களையும் பாதுகாத்து, எங்களையும், நாட்டையும் இந்தத் கொடுந் தொற்று பேராபாயத்திலிருந்து காப்பாற்ற நீங்கள்தான் எங்களின் ஒரே நம்பிக்கை! ஆம் நன்னம்பிக்கை!!


மெழுகுவத்திகளாய் வாழும் எமது உயிர்காக்கும் தோழர்களே -


பாலின வேறுபாடு இன்றி பணிபுரியும் தங்களின் பாங்கான சேவை தொடரட்டும்!


உங்கள் பணி வெற்றிகளைக் குவித்து,


நோயற்ற - நோய் தீர்ந்த புதியதோர் உலகு செய்ய


உங்களுடன் பயணிப்போம் -


ஒத்துழைப்போம் என்பதே


இன்று எங்கள் உறுதிமொழியும், நன்றிக் குவிப்பும்!


வாழ்க நீவிர்! வளர்க உங்கள் தொண்டறம்!


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


1.7.2020


No comments:

Post a Comment