டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராட்டிரா மாநிலங்களில் மத்திய அரசு நிலக்கரி ஏலம் விடுவதற்கு, ஒன்றிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் நடத்தியுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் மோடி அரசின் முடிவுக்கு, சுற்றுச்சூழல் துறையே சட்டத்தை மீறி அனுமதி அளித்துள்ளது என தலையங்கச் செய்தியில் கூறப் பட்டுள்ளது.
- மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கில், மாநிலக் கட்சிகள் தங்களது அரசியல் நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்திய சீன எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட, நாடு தழுவிய பிரச்சினையில், ஆளும் கட் சிக்கு எதிராக துணிவுடன் எடுத்துரைக்க வேண்டும் என கட்டுரை யாளர் சினில் கடாடே தெரிவித்துள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் கொலையில் காவல்துறை அதிகாரிகளுடன், ‘காவலர் நண்பர்கள்’ எனும் அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளதாக வந்துள்ள தகவலின் அடிப்படையில், அந்த அமைப்புக்கு, இரண்டு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. திரிபாதி தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் ஒரே நாளில் 4000-த்திற்கு அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை யில் முழு ஊரடங்கு காரணமாக, முந்தைய எண்ணிக்கையைவிட தற்போது சற்று குறைந்து வருகிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதனால் ஏற்பட்டுள்ள முழு அடைப்பு காரணமாக, மருத்துவக் கல்வி உள்ளிட்ட படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு நடத்துவதை ரத்து செய்திட வேண்டும் என்று மாணவர்களும் சமூக அமைப்புகளும் வேகமாக குரல் எழுப்பி உள்ளன.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- கரோனா தொற்று காரணமாக, பீகாரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மதிய உணவு தரப்படுவதில்லை. இதன் காரணமாக ஏழை மக்களின் பிள்ளைகள், பழைய இரும்புச் சாமான்களை எடுத்து விற்கும் வேலைக்குத் திரும்பி உள்ளார்கள்.
- பீகாரில் எம்.எல்.சி. பதவியை ராம் விலாஸ் பஸ்வான் கட்சியைச் சேர்ந்தவர்க்கு அளிப்பதற்கு, நிதிஷ்குமார் தலைமை யிலான அய்க்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது ஆளும் கூட்டணிக் கட்சியில் விரிசலை ஏற்படுத்தி வருகிறது.
- குடந்தை கருணா,
6.7.2020
No comments:
Post a Comment