17 ஆம் நூற்றாண்டு வாக்கில் கூட இலக்கியம் எனும் போர்வை யில் எத்தகைய கருத்துகள் உலா வந்தன என்பது கவனிக்கத்தக்கது.
கி.பி.17 ஆம் நூற்றாண்டில் சுப்பிரமணிய தீட்சதர் என்பவர் ஒரு நூலை எழுதினார். அந் நூலின் பெயர் ‘‘பிரயோக விவே கம்'' என்பதாகும்.
இந்நூல் குறித்து தமிழ் அறிஞர் இரா.இளங்குமரனார் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது.
‘‘வடமொழியும், தமிழும் தனித்தனி மொழிகள் அல்ல. ஒரு மொழி என்னும் மயக்கவுணர் வுடன், வடமொழியே தமிழ் மொழியின் மூலம் என்னும் மாறு பட்ட உணர்வும் கொண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றிய நூல் களுள் இப்பிரயோக விவேகம் ஒன்று'' என்று குறிப்பிடுகிறார்.
கி.பி.17 ஆம் நூற்றாண்டுகளில் சிற்றிலக்கிய மரபில் சதக இலக் கியங்களில் வைதீகத்தின் தாக் கத்தை மிகுதியாகப் பார்க்க முடி கின்றது - நீதிகளைப் போதிக்கும் மரபில் உருவாக்கப்பட்ட தண்ட லையார் சதகத்தினை அடுத்து எழுதப்பட்ட பல சதக இலக்கியங் கள் அந்தணர்களை உயர்வுபடுத் தியே பேசுகின்றன. உதாரணமாக அண்ணாமலைச் சதகம் - குமரேச சதகம், அறப்பளீசுர சதகம் முத லான நூல்களில் இப்போக்கைக் காணலாம். நான்கு வருணத்தாரின் இயல்புகளை நூலின் தொடக்கத் தில் பதிவு செய்யும் குமரேச சத கத்தில் மனுதர்ம சாஸ்திர நூலின் செல்வாக்கைப் பார்க்க முடிகின் றது. தமிழ்ப் புலமைவாதிகள் இக்கால கட்டத்தில் மனுவைப் படித்து, அதனைத் தம் நீதி போதனை நூல்களில் கொண்டு வந்தனர் என்பதற்கு இது நல்ல சான்று. இதே போக்கிலேயே கயிலைநாதர் சதகம் இயற்றப்பட் டுள்ளது. ஆனால், அண்ணா மலைச் சதகம் ஒருபடி மேலே போய் நான்கு வருணத்தாரையும் தரம் பிரித்து, விளக்கம் கொடுத்த நீதி கூறுகின்றது. அந்தணர்களை உயர்வு படுத்திக் கூறி, நான்கு வர் ணத்தாரின் அறுவகைத் தொழில் களைப்பற்றியும் வைசியர், வேளா ளரின் பெருமைகளையும் எடுத் துக் கூறுகிறது.
இதுபோன்றே அம்பலவாணர் கவிராயர் இயுற்றிய அறப்பளீசுர சதகம் வடமொழியையும், வேதத் தையும் மிக உயர்வாக விளக்கு கின்றது. சான்றாக,
வேதியர்க்(கு) அதிகமாம் ஜாதியும், கனகமக
மேருவுக்கு அதிகமலை யும், வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்(கு) அதிக
மேதினியினில் ஓடுநதி யும் சோதிதரும் ஆதவற்(கு) அதிகமாம் காந்தியும்,
சூழ் கனற்(கு) அதிகசுசி யும், தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,
சுருதிக்(கு) உயர்ந்தகலை யும் ஆதிவட மொழிதனக்(கு) அதிகமாம் மொழியும், நுகர்
அன்னதா னந்தனிலும் ஓர் அதிகதா னமுமில்லை என்றுபல நூலெலாம்
ஆராய்ந்த பேருரைசெய் வார்! ஆதவன் பிரமன்விண் ணவர்முனிவர் பரவவரும்
அண்ணலே! அருமைமத வேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே. (பாடல். 55.)
சூரியன், பிரம்மன், தேவர், முனிவர் ஆகியோர் வந்து வாழ்த் தும் முதல்வனே! வேதம் ஓது பவர்களுக்கு மேலான ஜாதியும், மேருவைவிடப் பெரிய மலையும், கங்கைக்கு மேலான ஆறும், ஞாயி றினும் ஒளிமிக்க பொருளும், தீயைவிடத் தூய்மையான ஒளியும், பெற்றோரினும் உயர்ந்த தெய்வமும், வேதத்தைவிட உயர்ந்த நூல்களும், வடமொழி யைவிட உயர்ந்த மொழியும், உண வைவிட உயர்ந்த கொடையும் இல்லை என நுட்பமான ஆராய்ச்சி அறிவுடையோர் கூறு வர் என்பது இப்பாடலின் கருத்து.
நம் தமிழ்ப் புலவர்களையும், தமிழில் இடம்பெற்ற இந்தப் பாழாய்ப் போன குப்பைகளையும் தந்தை பெரியார் கண்டித்ததில் குற்றமும் உண்டோ சொல்!
- மயிலாடன்
No comments:
Post a Comment