மராட்டிய மாநிலம் மும்பை வாழ் தமிழ் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப் படும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மும்பையிலேயே நடைபெறும் வகையில் தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டு, தேர்வுகள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. அப்படி மும்பையில் தமிழ் வழியில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 பள்ளி மாணவர்களும் தேர்வு மய்யங்களில் 2019 -20 ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, பதிவு செய்து இருந்தனர். இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்!
மும்பையிலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மும்பை தேர்வு மய்யத்தில் பதிவு செய்த, 69 பள்ளி மாணவர் களை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என்ற மும்பைத் தமிழர் களின் கோரிக்கையை ஏற்று, அறிவிப்புச்செய்த தமிழக அரசுக் கும், இதற்குத் தூண்டுகோலாக இருந்து எங்கள் கோரிக்கையை ஏற்று அறிக்கை வெளியிட்ட தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், இதற்காகக் குரல் கொடுத்த தமிழகத்தினுடைய அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மும்பைத் தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
இவண்,
பெ.கணேசன் (தலைவர், மும்பை திராவிடர் கழகம்)
No comments:
Post a Comment