ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 22, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • வால்வுடன் கூடிய மாஸ்க் அணிவதால், கரோனா பரவலைத் தடுக்க முடியாது. சாதாரண மாஸ்க் அணிந்தாலே போதுமானது என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

  • இந்திய சீன எல்லைப் பிரச்சினையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்புவதற்கு பா.ஜ.க. தரப்பில் உரிய பதில் அளிக்காமல் சாடுகிறது. ஏனைய எதிர்க்கட்சிகள் இது குறித்து பேசாமல் வேடிக்கைப் பார்க்கின்றன என தலையங் கத்தில் கூறப்பட்டுள்ளது.

  • அரசு வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, சென்ட்ரல் பாங்க், யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராட்டிரா ஆகிய வங்கிகளின் பங்குகளை தனியார்க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ள தாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து தாங்கள் மத்திய அரசுக்கு எந்த யோசனையும் தரவில்லை என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் பா.ஜ.க. அரசின் முயற்சியை முறியடித்து, சமூக நீதியைக் காப்போம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


தி இந்து, டில்லிப் பதிப்பு:



  • ரேஷன் பொருட்களை மக்களின் வீடுகளுக்கே சென்று தரும் திட்டத்திற்கு கேஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசு முடிவெடுத்துள்ளது.

  • தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம் இவை அனைத்தும் காவல் துறை வெட்கித் தலை குனிய வைக்கும் செயல் என மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் ரிபெரியோ அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு



  • பிற்படுத்தப்பட்டோரில் கிரிமிலேயர் கண்டறிய சம்பள வருமானத்தையும் வருமான வரம்பில் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து தங்களது கருத்தை விரைவில் தெரிவிப்போம் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தின் தலைவர் பக்வன் லால் சகானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


- குடந்தை கருணா


22.7.2020


No comments:

Post a Comment