டயாலிசிஸ் செய்ய இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

டயாலிசிஸ் செய்ய இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை

வீட்டிலிருந்தே டயாலிசிஸ் செய்யும் முறை அறிமுகம்!



புதுக்கோட்டை, ஜூலை 1- புதுக் கோட்டையில் வீட்டிலி ருந்தே டயாலிசிஸ் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இதன் மூலம் டயா லிசிஸ் செய்ய இனி மருத்து வமனைக்கு செல்ல வேண்டி யதில்லை எனவும் கூறப்படு கிறது. புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். இவர் கடந்த 15ஆம் தேதி சிறுநீரகக் கோளாறு காரண மாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். வழக்கமாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட வர்கள் வாரம் இருமுறை அல்லது மூன்று முறை மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்து கொள்வது வழக் கம்.


இதனால் காலவிரயம், பொருளாதார இழப்பு போன்றவை ஏற்படுவது உண்டு. ஆனால் அதற்கு மாற் றாக வீட்டிலிருந்தே சிகிச்சை செய்யும் முறையினை அருண் குமார் என்பவர் மேற்கொண் டுள்ளார். இந்தமுறை பெரி டோனியல் டயாலிசிஸ் என்று கூறுகிறார் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம். புதிய சிகிச்சையால் கரோனா காலத்தில் மருத்துவமனைக்கு அடிக்கடி வருவது தவிர்க்கப்படுவதாக கூறிய மீனாட்சி சுந்தரம், ஹீமோடயாலிசிஸ் செய்து கொள்வதினால் ஏற்படும் பின்விளைவுகளும், குறிப்பாக நோய் தொற்று இதன்முலம் தவிர்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை டயாலிசிஸ் திரவம் தேவைப்படலாம் என்று தெரிவித்த அவர், ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை செலவாகக் கூடிய இந்த சிகிச்சை முதல மைச்சரின் விரிவான மருத் துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செயல்பட் டுள்ளதாக தெரிவித்தார்.


No comments:

Post a Comment