ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • கரோனா தொற்று, அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பு இவை குறித்து பிரதமர் மோடி அண்மையில் பேசியபோது குறிப்பிடவில்லை. இவை எதற்கும் தற்போது தீர்வு இல்லை என்பதால், நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் திட்டத்தை அறிவித்துள்ளார் என தில்லி மூத்த பத்திரிக்கையாளர் பர்சா வெங்கடேஷ்வர் ராவ் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

  • இந்திய மீனவர்கள் இருவரை 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்தாலி கடற்படையினர் சுட்டுக் கொன்ற வழக்கில் அவர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முடியாது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்த ஆணையை மத்திய அரசு ரகசியமாக ஏன் வைத்திருந்தது என தலையங்கச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்திய ரயில்வேயில் புதிய பணியிடங்களை நிரப்பத் தடை விதித்துள்ளதற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • பிரதமர் மோடியின் லடாக் பயணம் பாராட்டுகுரியது. ஆனாலும், இந்திய எல்லையில் சீன ராணுவ ஊடுருவல் குறித்து வெளிப்படையான பதிலை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

  • ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வினை செப்டம்பர் மாதம் நடத்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்வு மய்யங்கள் பலவும், கரோனா பாதுகாப்பு மண்டலங்களாக செயலாற்றி வரு வதால், தேர்வினைத் திட்டமிட்டபடி, இம்மாதம் நடத்த இயலாது என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்த மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி சுகுமாரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

  • உயர்கல்வியும் சுகாதாரத் துறையும் அரசின் கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும். கல்வி என்பது ஜனநாயகத்தில் அனைத்து மக்களுக்குக்கும் கிட்டும் வகையில் அரசால் தரப்பட வேண்டும் என தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினரும், விவசாயம், சுற்றுச்சூழல், கூட்டுறவு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவரு மான ரமேஷ் சென்னமனேனி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.


- குடந்தை கருணா,


4.7.2020


No comments:

Post a Comment