இராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க முயன்ற மத்திய அமைச்சர் ஷெகாவத் பதவி விலக வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 20, 2020

இராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க முயன்ற மத்திய அமைச்சர் ஷெகாவத் பதவி விலக வேண்டும்

காங்கிரஸ் வலியுறுத்தல்


ஜெய்ப்பூர், ஜூலை 20- காங்கி ரஸ் ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற மத்திய அமைச்சர் ஷெகாவத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-


இராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க முயன்றது தொடர் பாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்று ஷெகாவத் கூறியுள்ளார். அப்படியென்றால் ஏன் குரல் பரிசோதனைக்கு அவர் அஞ்சுகிறார்?


அவர் மத்தியஅமைச்சரா கத் தொடர் வதற்கு தார்மீக உரிமை இல்லை. எனவே அவர் பதவி விலக வேண்டும். அப்போதுதான் விசாரணை எவ்வித தடையும் இன்றி தொடரும். இந்த விசார ணையைத் தடுப்பதற்காக மத் திய அரசு சி.பி.அய். பெயரில் மிரட்டுகிறது. இராஜஸ்தா னின் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு டில்லி, அரியானா காவல்துறையி னர் பாதுகாப்பு அளிக்கின்ற னர்.


இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.


இராஜஸ்தான் அரசிய லில் நிலவி வரும் இத்தகைய பரபரப்பான சூழலில் மாநில சட்டசபை இந்த வாரம் கூடும் என தெரிகிறது. விரி வான தொடராக நடத்துவது உள்ளிட்ட அனைத்து வழிக ளையும் அரசு ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் வட்டா ரங்கள் தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை நேற்று முன்தினம் முதல் அமைச்சர் கெலாட் சந்தித்து பேசினார்.


எனினும் இந்த கூட்டத் தொடரில் அரசு நம்பிக்கை வாக்கு கோருமா? என்ற கேள்விக்கு அஜய் மக்கான் பதிலளிக்கையில், அது குறித்து முதல்அமைச்சரும், மாநில அரசும் முடிவு செய் வார்கள் என தெரிவித்தார்.


200 உறுப்பினர் சட்ட சபையில் 107 உறுப்பினர்களை காங்கிரஸ் கொண்டிருந்த நிலையில், தற்போது சச்சின் பைலட்டும், அவரது ஆதர வாளர்கள் 18 பேரும் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் தகுதி நீக்க அபாயத் தில் உள்ளனர்.


அதேநேரம் 13 சுயேச்சை களில் 10 பேர் கெலாட் அரசை ஆதரிக்கின்றனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியை சேர்ந்த 2 உறுப்பினர்களும் அரசை ஆதரிக்கும் சூழல் உள்ளதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


இரண்டு உறுப்பினர்களை கொண்ட பாரதிய பழங்குடி கட்சி அதிகாரப்பூர்வமாக கெலாட் அரசுக்கு ஆதரவை அளித்துள்ளது. பழங்குடிப் பகுதி வளர்ச்சிக்கு உறுதிய ளித்ததால் கெலாட் அரசை ஆதரிப்பதாகக் கட்சியின் தலைவர் மகேஷ்பாய் வசவா தெரிவித்தார். தற்போதைய சூழலில் தாங்கள் கிங்மேக்க ராகத் திகழ்வதாகவும் அவர் கூறினார்.


No comments:

Post a Comment