காணொலிமூலம் வாசகர் கேள்விகளுக்கு ‘விடுதலை' ஆசிரியர் அளித்த பதில்
சென்னை, ஜூலை 3- நான் எப்பொழுதுமே பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்துகின்றவன். சொந்த புத்தியைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லாதவன். பெரியார் தந்த புத்தி என்பது, எந்தவிதமான சோதனைகள் வருகின்ற பொழுதும், தடங்கல்கள், தடைகள் வருகின்றபொழுதும் இன்னும் வேகமாக இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘விடுதலை' வாசகர்களின் கேள்வியும் -
ஆசிரியரின் பதிலும்!
கடந்த 1.6.2020 அன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே உரையாற்றி முடித்ததும், வாசகர்களின் கருத்துகளுக்கும் கேள்விகளுக் குப் பதில் அளித்தார்.
அக்கேள்வி - பதில் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஜெயக்குமார், தஞ்சாவூர்
கேள்வி: அய்யா அவர்களுக்கு வணக்கம். ‘விடுதலை' ஆசிரியர் அய்யா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
‘விடுதலை' ஆசிரியராக நீங்கள் பொறுப்பேற்கும் பொழுது உங்களுக்கு சிறிய வயதுதான்.
நீங்கள் பலமுறை எழுதியதை நான் படித்திருக்கிறேன். நான் எப்படி தலையங்கம் எழுத முடியும்? என்று பெரியார் அய்யாவிடம் கேட்டீர்கள் என்றும், ‘‘நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம், உங்களுக்கு ஆங்கிலம் தெரியும்; ‘இந்து' பத்திரிகையில் வரும் கருத்துகளுக்கு எதிர்ப்பாக எழுதுங்கள் போதும் என்று சொன்னார்” என்று எழுதி யிருக்கிறீர்கள்.
அதற்குப் பிறகு, சில நேரங்களில் விடுதலையில் வெளிவரும் தலையங்கத்திற்கும், அறிக்கைக்கும், ‘இது என்னுடைய கருத்து இல்லை. இது ‘விடுதலை'யினுடைய கருத்தில்லை - தலைமையினுடைய கருத்து இல்லை’ என்று சொல்லி, பெரியார் எழுதியதாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
அதற்குப் பிறகு நீங்கள் பொறுப்பேற்ற பின் அது போன்று வந்ததா?
ஆசிரியர்: இந்த வாரம்கூட ஒரு நண்பர் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். அதே கேள்வியைத்தான் நீங்களும் கேட்டு இருக்கிறீர்கள்.
‘விடுதலை' ஆசிரியராக அய்யா அவர்கள் என்னை அமரவைத்த பிறகு, எனக்கு ஏதாவது ஒரு பெரிய பேறு இருக்கிறது என்றால், நான் பெற்ற பேறு என்று மகிழ வேண்டும் என்றால், நான் எழுதியதற்காக மறுப்பு எதுவும் அய்யாவிடமிருந்து வந்ததில்லை.
காரணம் என்னவென்றால், அதற்கு முன்பு இருந்த ‘விடுதலை' ஆசிரியர் தலையங்கம் எழுதும்பொழுது, சில நேரங்களில், ‘இது என்னுடைய கருத்தல்ல’ என்று அய்யா பிறகு எழுதுவார்.
இதையெல்லாம் பார்த்தபிறகு, அதிலிருந்து நான் பாடம் கற்றுக் கொண்டேன். நான் அந்தப் பொறுப்பை ஏற்கும்பொழுது, எந்தக் காரணத்தை முன்னிட்டும், பெரியார் கருத்தை தவிர, வேறு கருத்தை எழுதுவதில்லை. அவருடைய கருத்தை ஒலி பெருக்கியாக்கி சொல்வதற் காகத்தான் இருக்கிறோம். இது அவருடைய பத்திரிகை, அவருடைய இலட்சியம். அதனை விளக்குவதற்காகத்தான் நாம் இருக்கிறோம்.
ஆகவே, அதனை விளக்கவேண்டும் என்ற முறையில்தான் நான் எழுதியிருக்கிறேன். ஒரு நாளும் நான் எழுதியதற்கு அவர் மறுப்பு எழுதியில்லை.
ஒரு வேடிக்கை என்னவென்றால், அய்யா பல நேரங்களில் ‘விடுதலை'யை வெளியூர்களில் இருந்து பார்ப்பார். அப்படி படித்துவிட்டு, ‘‘நான் இதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன்; நீ எழுதியிருக்கிறாய்'' என்பார்.
சில நேரங்களில், ‘‘புலவர், கடிதம் எழுதிப் போடுங்கள்; அதைப் பற்றி தலையங்கம் எழுதச் சொல்லுங்கள் ஆசிரியரை'' என்று சொல்வாராம்.
அந்தக் கடிதம் எங்களிடம் வந்து சேர்வதற்கு முன்பாக, அந்தக் கருத்தையொட்டியே நான் தலையங்கம் எழுதி யிருப்பேன். அடுத்த நாள் காலையில், அந்தத் தலையங் கத்தைப் படித்துவிட்டு, ‘அந்தக் கடிதம் போய்ச் சேருவதற்கு முன்பே, அந்தக் கருத்தைத்தான் தலையங்கமாக எழுதி யிருக்கிறார் ஆசிரியர்’ என்பார்.
காரணம் என்னவென்றால், அதில் என்னுடைய சாதனையோ, திறமையோ ஒன்றுமில்லை. தலைவர் என்ன நினைக்கிறாரே, அதைத்தான் தொண்டர்கள் நினைக் கிறார்கள், நம்முடைய இயக்கத்தில். தொண்டர்கள் என்ன நினைக்கின்றார்களோ, அதைத்தான் தலைவரும் நினைக் கின்றார்.
இரண்டிற்கும் மாறுபாடே கிடையாது. எனக்கு எப் பொழுதும் எந்த சென்சாரும் வந்ததேயில்லை. அதுதான் நான் பெற்ற மிகப்பெரிய சிறப்பூதியம், பெருமை, விருது எல்லாம் அய்யாவிடமிருந்து.
நான் நினைத்தேன், எழுதி விட்டீர்கள் என்று பாராட்டித்தான் இருக்கிறார் அய்யா - மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை.
வாட்ஸ் அப்பில் ‘விடுதலை'யைப் பரப்புகின்றோம்; எந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கும்?
பொறியாளர் இன்பக்கனி, சென்னை
கேள்வி: நீங்கள் 58 ஆண்டுகளாக ‘விடுதலை' ஆசிரிய ராக இருந்திருக்கிறீர்கள்; அய்யாவினுடைய காலத்திலும் ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதிய தலை யங்கத்திலேயே அய்யா பாராட்டிய தலையங்கம் எது?
இரண்டாவது கேள்வி, நீங்கள் சொல்லியபடி, ‘விடு தலை' நாளிதழை வாட்ஸ் அப்பில் நிறைய பேருக்கு அனுப்புகின்றோம். பிராட்காஸ்ட் என்பதில் 250 பேருக்கு ‘விடுதலை' நாளிதழை அனுப்புகின்றேன்.
நிறைய வாட்ஸ் அப் குரூப்பில், நிறைய பத்திரிகைகளை வெளியிடுகிறார்கள். அவையெல்லாம் இலவசமாகப் படித் துக்கொள்ளலாம் என்பதால், நிறைய பேர் படிக்கிறார்கள்.
அதேபோன்று, நாமும் வாட்ஸ் அப்பில் ‘விடுதலை' யைப் பரப்புகின்றோம். பின்னாளில் இது நமக்கு எந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கும்?
ஆசிரியர்: ‘விடுதலை'யை படிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால், இதை அப்படியே தொடருவோம்.
‘நீதி கெட்டது யாரால்?' என்ற தலைப்பு போட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளைப்பற்றி ஒரு அறிக்கையை எழுதினோம். அந்த அறிக்கையைப் பார்த்துவிட்டு அய்யா அவர்கள், “நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் வழக்கு ரைஞர் - உங்களுக்குப் பிரச்சினை வரும். அந்த அறிக் கையை என்னுடைய பெயரிலேயே வெளியிடுங்கள்” என்றார்.
இதைவிட எனக்கு பெரிய பெருமை ஏது?
அந்த அறிக்கையில், ‘பெரியார் அறிக்கை’ என்று போட்டு, இரண்டு வார்த்தையை இணைத்தார். ‘‘நீதி கெட்டது யாரால்? - பெரியார் அறிக்கை” என்று வெளியிட்டோம்.
அந்த அறிக்கைக்குப் பெரிய வரவேற்பு இருந்தது.
நம்முடைய தொண்டர்கள், தோழர்கள் எல்லோருமே அறிவு நாணயம் உள்ளவர்கள் என்பதற்கு அடையாளம்,
அந்த அறிக்கையை வேலூர் மற்ற இடங்களில் அதி காரிகள் எல்லாம் மிகவும் பாராட்டினார்கள் என்றார்கள். அந்தப் பேப்பரை கலெக்டர், எஸ்.பி., அய்.ஏ.எஸ்., அய். பி.எஸ். அதிகாரிகள் கேட்டார்கள், கொடுத்துவிட்டோம் என்று ஒரு நான்கைந்து பேர் அய்யாவிடம் சொன்னார்கள்.
அந்த அறிக்கை அய்யாவைத் தவிர வேறு யாரும் எழுத மாட்டார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.
அய்யா அவர்கள் சிரித்துக்கொண்ட சொன்னார், ‘‘அந்த அறிக்கையை நான் எழுதவில்லை. வீரமணிதான் எழுதினார். ஆனால், வீரமணி பெயரில் போட்டால், சில சங்கடங்கள் வரும்; அல்லது அதற்குரிய வெயிட் வர வேண்டும் என்றால், என்னுடைய பெயரில் வந்தால்தான், அது அரசாங்கத்தினுடைய கவனத்தை ஈர்க்கும் என்ப தால்தான், நானே சொல்லித்தான் என்னுடைய பெயரில் ‘விடுதலை'யில் வெளியிடச் சொன்னேன். அதில் என்னு டைய கையெழுத்தைப் போட்டேன்'' என்றார்.
அப்படியா? என்று எல்லோரும் திகைத்துப் போனார்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினை களைப்பற்றி எழுதியபொழுதும், ஆபரேசன் வெற்றி, நோயாளி செத்தார் என்று எழுதினார். அதை ஒரு புத்தகமாகப் போடவேண்டும் என்றார்.
அய்யாவினுடைய கருத்துகளைத்தான் எழுதுகிறோம், வேறொன்றும் புதியதல்ல.
நாங்கள் மாநாட்டினை நடத்துவதற்குத்
தயாராக இருக்கிறோம்
போஸ்கோ, பிரான்சு
கேள்வி: தமிழீழம் சார்ந்த உரிமைப் போராட்டங்கள், வேலைத் திட்டங்களைப் பற்றி அய்.நா.விலும், அய்ரோப் பிய ஒன்றியத்திலும் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண் டிருக்கிறோம்.
தமிழீழம் சார்ந்த - இன அழிப்பைச் சார்ந்த அல்லது தமிழர்களுடைய உரிமை சார்ந்த விஷயங்கள் உங்க ளுடைய பத்திரிகையில் தொடர்ந்து வந்துகொண்டிருக் கின்றது.
யூதர்களாக இருக்கின்றவர்களுடைய பிரச்சினைகள் பற்றி பிரான்சிலோ, மேற்கத்திய நாடுகளிலோ ஒவ்வொரு ஊடகங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்முடைய பிரச்சினைகளை - ஒரு சில நிகழ்வுகளில் மட்டும் சொல்கிறோம். அதற்குப் பிறகு அந்தப் பிரச்சினைகள் தொய்வு நிலையில் இருக்கிறது.
ஜெனீவாவாக இருக்கட்டும், அய்ரோப்பிய ஒன்றிய மாக இருக்கட்டும் - தமிழீழத்திற்கான ஆதரவை உங் களைப் போன்றவர்கள் குரல் கொடுக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால், என்னைப் பொறுத்த மட்டில், தமிழீழம் என்பதற்குப் பின்னால், ஒட்டுமொத்த தமிழ்நாடும் நிற்கவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
அய்யா, நீங்கள் வர விரும்பினால், நாங்கள் மாநாட் டினை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறோம்.
ஆசிரியர்: தமிழர்கள் பாதிக்கப்படுகின்ற செய்திகள் எங்களுக்குத் தெளிவாகக் கிடைக்கின்றபொழுது, அதனை உடனே நாங்கள் கண்டித்து எழுதுவதற்கோ அல்லது தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதற்கோ வாய்ப்பு இருக்கும்.
ஆனால், அண்மைக்காலமாக அந்தச் செய்திகள் இங்கே சரியாக வருவதில்லை,
நிச்சயமாக, எங்களுடைய கொள்கை நடைமுறைத் திட்டத்தில், தமிழீழ ஆதரவில் எந்தவிதமான மாறுதல் களும் கிடையாது.
ஆனாலும், அதே சூழ்நிலையில், இன்றைய நிலைமை என்ன என்று பார்க்கும்பொழுது, தமிழர்களுடைய வாழ்வு ரிமை மிகவும் முக்கியம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
அந்த வகையில், அவர்களுடைய வாழ்வுரிமைப் போராட்டம் - பாதுகாப்பு - அவர்களுடைய லட்சியத்தில் இருக்கின்ற வேட்கை இவைகளைப்பற்றி எப்பொழுதும் போல எங்களுடைய ஆதரவு - நிச்சயமாக ஈழத்தமிழர் எங்கிருந்தாலும், அவர்களுடைய குரலுக்கு ‘விடுதலை' யினுடைய ஆதரவு நிச்சயமாக உண்டு.
தந்தை பெரியாரின் நூல்களை உலக அளவில் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும்
கல்வியாளர் நாராயணன் ராஜா, ராஜபாளையம்
கேள்வி: ‘குடிஅரசு' பத்திரிகையின் மூலமாக, மகாத்மா காந்தியையே சீனிவாச அய்யங்கார் வீட்டு அடுப்பங்கரை வரைக்கும் கூட்டிக் கொண்டு போன இயக்கம், இந்த சுயமரியாதை இயக்கம்.
நாம் அதனைத் தொடர்ந்து, இந்தி எதிர்ப்புப் போராட் டம், குலக்கல்விப் போராட்டம், பிராமணர் கபே, ஜாதி முறைக்கு எதிராக இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம், அய்யா சொன்னதுபோல, இட ஒதுக்கீடு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தம் - பின்னாளில் 69 சதவிகித இட ஒதுக்கீடு, மண்டல் கமிசன் என்று இப்படி நாம் எவ்வளவோ விளைச்சல்களை நாம் சந்தித்திருந்தாலும், இன்றைக்கு இருக்கக்கூடிய வெட்டுக் கிளிகள், இப்போது கரோனா காலகட்டத்தில் தாக்கிக் கொண்டிருப்பதுபோல, மத்திய அரசாங்கம் நமக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலை இன்னும் ஒரு நான்காண்டு காலம் கொடுக்கும். இந்த நான்காண்டு காலத்திற்கு நாம் மிகவும் அழுத்தமான வேலைத் திட்டத்தை வைக்கவேண்டும் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள்.
அடுத்து, ஆசிரியர் அய்யாவிடம் கேட்டுக்கொள்வது, தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, அவருடைய தொண் டறத்தைப் பற்றி, அவருடைய சேவை பற்றி நூற்றுக் கணக்கான நூல்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அவை எல்லாவற்றையும், அகில இந்திய அளவில் உள்ள - தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய நூலகங்களில் எல்லா வற்றிற்கும் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும்.
ஆங்கில வழி நூல்களை உலகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் நாம் எடுத்துக் கொண்டு போய்ச் சேர்த்தால், அது எதிர்கால சந்ததியினருக்கு, இப்படி ஒருவர் புத்தருக்குப் பிறகு இருந்தார் என்று எடுத்துக் காட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தியா முழுவதும் உள்ள ஆவணக் காப்பகங்களுக்கு அனுப்பவேண்டும்; நேஷனல் நூலகத்திற்கு அனுப்ப வேண்டும்; தமிழ்நாட்டில் பெரிய பெரிய தனியார் நூலகங் கள், அரசு நூலகங்களுக்கெல்லாம் நம்முடைய நூல்களை அனுப்பவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
அடுத்ததாக, ஆசிரியர் அல்லாமல், கவிஞர் அவர் களுக்கும், மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவென்றால், சாமுவேல் ஜான்சனுக்கு, ஒரு ஜேம்ஸ் பாஸ்வெல் கிடைத் ததுபோல, தந்தை பெரியார் அவர்களுக்கு ஆசிரியர் அவர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆசிரியர் அவர்களு டைய அற்புதமான கருத்துகள், ஏற்கெனவே ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள், தலையங்கத்தில் முக்கியமான தலையங்கத்தைப்பற்றி!
என்னுடைய கருத்து என்னவென்று கேட்டால், ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதிய எல்லா எழுத்துகளும் தமிழர்களுடைய தலையெழுத்துத்தான். ஆகவே, அந்தத் தலையங்கம் அனைத்தையும் நூல்களாகக் கொண்டு வரவேண்டும். தொகுதி தொகுதியாகக் கொண்டு வந்தா லும் நல்லது. பெரியாருக்குச் செய்த முயற்சி போல் செய்ய வேண்டும்.
அதுபோல, ஆசிரியர் அவர்களே, தாங்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட செய்திகளை ‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்'' என்ற தலைப்பில், தன் வரலாறு, இயக்க வரலாற்றை எழுதிக் கொண்டு வருகிறீர்கள்.
ஆனால், உங்களுடைய உரைகள், உங்களுடைய கருத்துகள் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியீடாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
நீங்கள் நூறாண்டு கடந்து வாழ்ந்தால்தான், இந்தத் தமிழ்ச் சமூகம் வாழும். ‘விடுதலை'க்கு நான் எல்லா வகையிலும் துணையாக இருப்பேன் என்பதை, ‘விடுதலை' வாசகன் என்ற முறையிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர் என்ற முறையிலும் கூறிக்கொள்கிறேன்.
ஆசிரியர்: உங்களுடைய அருமையான திட்டங் களுக்கு நன்றி!
பெரியாரின் ஆங்கில நூல்கள், உள்நாட்டுப் பல்கலைக் கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் செல்லவேண்டும் என்பதற்காக பல நண்பர்கள், பெரியார் பன்னாட்டமைப்பு உள்பட பலரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக இ-புக் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஆங்கிலப் புத்தகங்களைப் போட்டுக் கொண்டிருக்கின் றோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்திய அர சைப் பொறுத்தவரையில், அவர்களுடைய அனுமதியைப் பெற்றுத்தான், புத்தகங்களை நன்கொடைகளாகக் கொடுத் தாலும்கூட வைக்கவேண்டும் என்றெல்லாம் அவர்கள் கட்டுப்பாடுகளை வைக்கிறார்கள். என்றாலும், நாங்கள் அதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.
உங்களைப் போன்றவர்கள் அந்தக் கருத்தை ஆழமாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
இதற்காக ஒரு தனிக் குழு அமைத்து, நிச்சயமாக தங்களைப் போன்றவர்களுடைய யோசனைகளைப் பெற்று, சிறப்பாக அதனைச் செய்து உலகளாவிய அள விற்குக் கொண்டு செல்வோம்.
நம்மால் முடிந்த அளவிற்கு, அய்யாவினுடைய கருத்து களை அதிகமாகப் பரப்புவதற்கும், அதை வேகமாக அச்சிட்டுப் பரப்புவதற்கும், அதற்குரிய வாய்ப்புகளையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்ற காலகட்டத்தில், என்னுடைய உரைகளையும், கருத்துகளையும் புத்தகமாகக் கொண்டு வருவதற்கு உடனடியாகச் செய்ய முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.
அய்யாவிற்கு முன்னுரிமை - அதுதான் தத்துவம். அந்தத் தத்துவத்தை விளக்குவதற்கு, ஒலிபெருக்கிதான் நாம்.
ஆகவே, அந்த அடிப்படையை முழுமையாக பல கோணங்களில் செய்யவேண்டும்; பல மொழிகளில் செய்யவேண்டும். நண்பர்கள் இங்கே சொன்னதுபோல, சமூகநீதிக் கருத்துகளை இந்தி மொழியில் அச்சிட்டு, வடபுலத்தில் பரப்பினால், புதிய விளை நிலத்தில், விதைகளை விதைத்ததுபோல ஆகும். பணிகள் நிறைய இருக்கின்றன.
உங்களுடைய திட்டங்களைக் கருத்தில் கொண்டு, படிப்படியாக, முறையாக அதனை செய்வோம்.
உங்களுடைய யோசனைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி!
(தொடரும்)
No comments:
Post a Comment