நமது இயக்கத்தில் உள்ள பொறுப்பாளர்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்குத் தனது உடல் நலத்திற்கு கொடுக்காதது மிகவும் வேதனையளிக்கிறது. ஆசிரியர் அய்யா எழுதியுள்ள "வாழ்வியல் சிந்தனை" கட்டுரைகளில் உடல் நலம் சார்ந்த பல அரிய தகவல்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் நான் படித்து விடுவேன்.
மோட்டார் வாகனங்களைச் சரியாக பராமரிப்பதைப் போல உங்கள் உடல் நலத்தையும் பராமரிப்பது மிகவும் முக்கியம் என எளிமையாகப் புரியும்படி எழுதியதால்தான் இன்றுவரை நான் நலமோடு இருப்பதற்கு காரணம். அதைப் போலவே நமது கழக உறுப்பினர்கள் அனைவரும் உடல் நலத்தில் அக் கறை எடுத்து கொள்ள வேண்டும். அந்தந்த மாவட்டப்பொறுப் பாளர்கள் உடல் நலத்தைப் பற்றி தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள வேண்டும். எனது உடல் நலத்தைப் பாதுகாத்த பொறுப்பு மானமிகு பழநி.புள்ளையண்ணன் அய்யா அவர்களையும், சிந்தாமணியூர் சுப்பிரமணியம் அய்யா அவர்களையுமே சாரும்.
ஆசிரியர் அய்யா எழுதிய வாழ்வியலை படிப்போம். வள மோடும், உடல் நலத்தோடும் வாழ்வோம். பகுத்தறிவாளர்கள் விஞ்ஞானிகளுக்கு ஒப்பானவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நன்றி வணக்கம்.
- ஓமலூர் பெ.சவுந்திரராசன்,
பொதுக்குழு உறுப்பினர்
- - - - -
அன்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
இணையவழிக் காணொலிக் கூட்டத்தில் நானும் எனது மருத் துவ நண்பர்களும் கலந்திருந்தோம்.இக்காணொலி எங்களுள் பல அறிவொளிகளை சுடரவிட்டுள்ளது என்றே பதிவிட விரும்பு கிறேன் அய்யா.
அதில் முக்கியமானது, "என் போன்ற மருத்துவ மாணாக்கர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பிற்கு முதன்மையான காரணமானது தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் அல்ல, அதற்கு தந்தை பெரியார் சிந்திய ரத்தமும் உழைப்புமே முதன்மையான காரணமாகும்" என்று நீங்கள் கூறியது தான்! இதை அனைத்து மாணாக்கர்களுக்கும் கொண்டுச் சென்று புரியச் செய்ய வேண்டும் என்ற எங்களின் கடமையை உங்கள் பேச்சின் மூலம் அறிந்தோம், உணர்ந்தோம். நிச்சயம் அக் கடமையைச் செய்வோம்.
ஒவ்வோர் ஆண்டும் மருத்துவக் கல்லூரியில் சேரும் முதல் நாளில் பல மஞ்சள் நிற துணிப் பைகள் காணப்படும்.ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அதைக் கொண்டு வருபவர்களை காணவில்லை. இச்சமூக அநீதியை வேரோடு பிடுங்கி எறிந்து நீதியை நிலை நாட்டி, அந்த மஞ்சள் துணிப் பைகளை மீண்டும் பார்க்க வேண்டும். இத்தகைய அநீதிகளை எதிர்க்க எப்போதும் உங்கள் பின் என் போன்ற திராவிட மாணாக்கர்கள் இருப்போம் அய்யா! இன்றைய உரையின் மூலம் என் போன்ற அனைத்து மாணாக்கர்களின் மனதிலும் ஓர் அழகிய 'கடமை' விதையை விதைத்தமைக்கு நன்றி அய்யா.
அன்புடன்,
- சி.தமிழருவி
மருத்துவக் கல்வியில் சமூநீதி தொடர்பான இணையவழி கருத்தரங்கத்தில் நான் கலந்துகொண்டு உங்கள் உரையைக் கேட்டேன், எனக்கு உங்கள் உரையைக் கேட்கும் முன்பு இந்த தலைப்பு தொடர்பில் எதுவுமே தெரியாத நிலை, ஆனால் உங்களின் கருத்தாழமிக்க உரையில் கடந்த 100 ஆண்டுகளாக என்ன நடந்தது என்பதை அறிந்துகொண்டேன்.
உங்களின் உண்மையான போராட்டம் குறித்து இத்தனை ஆண்டுகளாக அறியாமல் இருந்ததற்கு மனதளவில் குற்ற உணர்ச்சியில் உழன்றுபோனேன். எளிய வகுப்பில் இருந்து வந்த நாங்கள் அணியும் வெள்ளை ஆடை மற்றும் ஸ்டெதஸ்கோப் கருவி இரண்டையும் நாங்கள் பெற இந்த அளவிற்கு பெரும் போராட்டம் நடத்தியுள்ளீர்கள் என்பதை அறியும் போது இதன் மீதான மதிப்பு மேலும் எங்களுக்கு அதிகரிக்கிறது. நானும் மருத்துவப் படிப்பின் முதுகலைக்கான நீட் தேர்வு எழுதி கலந்தாய்வில் கலந்துகொண்டவள். கலந்தாய்வின்போது இடஒதுக்கீடு குறித்த நடைமுறையை நானும் கடந்து வந்துள்ளேன். ஆனால் மற்ற எல்லோரையும் போல அதை குறித்து கவனம் செலுத்தாமல் கடந்து வந்துள்ளேன். இடஒதுக்கீடு அதன் மூலம் எங்களை இந்த அளவிற்கு கொண்டுவர நீங்கள் செய்த போராட்டங்கள் விடுத்த அறிக்கைகள் என பலவற்றை கூறிகொண்டு இருக்கும் போது எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி ஊடுவியது.
இப்போதுதான் உண்மையை அறிந்துகொண்டேன். உண் மையில் நான் இந்த இடத்திற்கு வருவதற்குப் பின்னால் உள்ள வரலாற்றுப் போராட்டங்கள் குறித்து புரிந்துகொண்டேன்,
உங்களது காணொலிக் கருத்தரங்கம் முடிந்த பிறகு நான் எனது உடன் பயிலும் மருத்துவர்களிடம் இது குறித்து எடுத்து ரைத்தேன் அனைவருமே ஒரு ஆழமான அமைதியைக் காட்டினார்கள். காரணம் அவர்களுக்கு நான் அனுபவித்தது போன்ற உணர்வு வெளிப்படையாக தெரிந்தது. நான் தனிப்பட்ட முறையில் எங்களை இந்த நிலைக்கு உயர்த்தியதற்கு உங்களது போராட்டம் எந்த அளவிற்கு பேருதவி புரிந்துள்ளது என்று அறிந்துகொண்டேன். இந்த மூன்றுமணி நேரக் காணொளிக் கருத்தரங்கம் என்னுடைய 25 ஆண்டுகால வாழ்க்கைக்கு எவ்வாறு உதவியுள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. சுயநலமிக்க இந்த உலகில் எங்களைப் போன்றவர்களை தங்களின் பிள்ளைகளாக நினைத்து எங்களின் எதிர்காலம் குறித்த அக்கறையோடு நடத்திய போராட்டம் மற்றும் அர்பணிப்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. உங்களின் போராட்டம் எங்களுக்கு உந்துசக்தியை வழங்கியுள்ளது நீங்கள் கடந்தவந்த பாதையில் நாங்களும் இனி பயணிப்போம். இனி நாங்களும் அனை வருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிக்காக அர்ப்பணிக் கிறோம். எங்களுக்காக நீங்கள் கடந்து வந்த போராட்டப்பாதை குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்துவோம். இதில் எழுதிய வைகள் என்னுடைய மனதில் எழும் நன்றியின் சிறு பகுதி மட்டுமே.
நன்றி ஆசிரியரே!!
- மரு. பிரியா மானவீரன்
No comments:
Post a Comment