லக்னோ, ஜூலை 3- உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆகஸ்ட் 31க்குள் விசார ணையை முடிக்க சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் நாள்தோறும் விசாரணைகளை நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1992 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் உமாபாரதி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை2) ஆஜரானார்.
சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் தற்போது குற்றவியல் நடைமுறை அல்லது சிஆர்பிசி பிரிவு 313 (குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க நீதிமன்றத்தின் அதிகாரம்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரின் அறிக்கைகளை பதிவு செய்து வருகிறது.
61 வயதான பாஜக தலைவர் 27 ஆண்டுகளுக்கும் மேலான வழக்கில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 19ஆவது குற்றவாளியாவார். முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்ட 13 குற்றவாளிகள் இந்த நிலையில் இன்னும் விசாரிக்கப்படவில்லை.
வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விரும்புவதாக அவர்களின் வழக்குரை ஞர்கள் சிபிஅய் நீதிமன்றத்தில் தெரிவித் துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்திலுள்ள அயோத்தி யில், பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, ராமர் பிறந்த இடம் எனக்கூறி கர சேவகர்கள் இடித்துத் தள்ளினர்.
டிசம்பர் 16, 1992 அன்று மத்திய அமைச்சரவை, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.லிபரான் தலைமையிலான லிபரான் குழுவை மசூதி இடிப்பைக் குறித்து விசாரணை செய்ய அமைத்தது. 16ஆண்டுகளுக்கும் மேலாக மொத்தம் 399 அமர்வுகளுக்குப் பின்பு இக்குழு அப்போ தைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 1,029 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஜூன் 30, 2009 அன்று அளித்தது.
அவ்வறிக்கையின்படி, டிசம்பர் 6, 1992 அன்று நடைபெற்ற அயோத்தி நிகழ்வுகள் "தன்னிச்சையானவையோ திட்டமிடப் படாதவையோ" அல்ல. அதில் வாஜ்பாய், அத்வானி, சுதர்ஸன், கல்யாண்சிங், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 68 பேர் மற்றும் இந்துத்துவா அமைப்பு களையும் குற்றவாளிகளாக சுட்டிக் காட் டப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்து வந்த ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகளை விடு வித்து உத்தரவிட்டது. இதனை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால், குற்றவாளிகளின் விடுதலைக்கு சட்டரீதியான எந்த முகாந்திரமும் இல் லாத நிலையில் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளித்ததை உச்சநீதிமன்றம் 2017 ஏப்ரல் 19இல் நிராகரித்தது. தினந் தோறும் விசாரணை நடத்தி 2 ஆண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத் தரவுப்படி ஆகஸ்ட் 31க்குள் விசாரணையை முடிக்க சிபிஅய் நீதிமன்றம் அன்றாட விசாரணைகளை நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment