லியோ டால்ஸ்டாய் (1828-1910) ருசியாவின் பிரபல எழுத்தாளர். அவர் எழுதிய சிறுகதைகளும், தத் துவங்கள் நிரம்பிய கட்டுரைகளும் காந்தியின் கவனத்தைக் கவர்ந்தன. 1990 செப்டம்பர் மாதத்தில் லண்ட னில் வெளிவந்த ‘இல்லஸ்ட்ரேட்டட் நியூஸ் வீக்லி' என்ற பத்திரிகையில் டால்ஸ்டாய் ‘இந்து'வுக்கு எழுதிய ஒரு கடிதம் என்ற நீண்ட கட்டுரை காந்தியார் கவனத்துக்கு வந்தது. டால்ஸ்டாய் அந்தக் கட்டுரையில் எழுதினார். ‘ஒரு வியாபாரக் குழு' 20 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டை அடிமைப்படுத்தி விட்டது. என்ன நடந்தது என்றால், 30,000 பேர் பலசாலிகளாக இல்லை. எலும் பும் தோலுமாக இருந்தவர்கள் 20 கோடி மக்களை அடக்கிவிட்டார்கள் என் றால், அது இங்கிலீஷ்காரர்களின் சாமர்த்தியமல்ல. இந்தியர்கள் தம் மையே அடிமையாக்கிக் கொண்ட நிலைதான்'' என்று குறிப்பிட்டார்.
பிறகு டால்ஸ்டாய்க்கு காந்தி யார் கடிதம் எழுதி, அவரின் அனுமதியைப் பெற்று கட்டுரையின் மொழி பெயர்ப்பை வெளியிட்டார். அதிலிருந்து டால்ஸ்டாயுடன் காந்தி கடிதங்கள்மூலம் அவரின் கருத்து களை அறிந்துகொண்டார். ஒரு வன் முறையை எதிர்த்து நிற்க மற்றொரு வகை வன்முறையை மேற்கொள் ளாமல் அலாதியான வகையில் செயல்படலாம் என்ற கோட்பாடு எப்படி டால்ஸ்டாய்க்கு வந்தது என்று காந்தி வினவியபொழுது, டால்ஸ்டாய் பதிலளித்தார்! ‘‘நான் திருக்குறளின் மொழி பெயர்ப்பை படித்தபொழுது வள்ளுவர் இயற் றிய ‘இன்னா செய்யாமை' என்ற அதிகாரத்தில் உள்ள ‘இன்னா செய் தாரை ஒறுத்தல்' என்ற குறள் தந்த உணர்வுதான்'' என்று பதில் அனுப்பி னாராம். இதுபற்றி மகாத்மா காந்தி அவர்களே வெளிப்படையாகக் கூறினார்.
‘‘திருவள்ளுவர் இயற்றிய தன் குறளை அதன் மொழியிலேயே படிக்கவேண்டும் என்பதுதான் தமிழ்மொழியை நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்ததற்குக் கார ணம். அந்த நூலைப் போல் ஒழுக்க நெறிமுறைகளை மக்களுக்கு ஊட் டும் அறிவுக் களஞ்சியம் வேறெது வும் இருக்க முடியாது.''
- வள்ளுவர் வழியில் காந்தியார் - இரா.செழியன், ‘தினமணி' கட்டுரை, 2.10.2013, பக்கம் 8
காந்தியாருக்கே ‘மானசீக'க் குரு வான டால்ஸ்டாயையே சிந்தனை வழி பாதிப்பை ஏற்படுத்திய பேரறிவாளர் திருவள்ளுவர். அவர் யாத்த குறள் உலகப் பெருநூல் - மத நூலான பைபிளையடுத்து அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்ட நூல்.
அந்த நூலைப் பார்ப்பனர்கள் - அவர்களின் சங்கர மடம் எந்தப் பார்வையில் அணுகுகிறது? மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந் திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?
‘‘நல்ல குணம் வளர அறத்துப் பாலில் வள்ளுவர் என்ன சொல்லி யிருக்கிறாரோ, அதைச் சொல்லிக் கொடுத்தால் போதும். வேதத்தின் சாரம் அதிலுள்ளது. திருக்குறளில் பொருட்பால் - காமத்துப்பால் முத லியவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காமத் துப்பாலை இந்தக் காலத்துச் சினி மாக்களே சொல்லிக் கொடுத்துவிடு கின்றன.''
‘தினமணி', 6.4.1982
பெரிய மனிதர் ‘பெரியவாள்' என்று பார்ப்பனர்களால் ஏற்றிப் போற்றப்படும் சங்கராச்சாரியாரின் இந்தப் புத்தியை எதைக் கொண்டு சாற்றுவது? ‘காம'கோடிக்கு காமத் தில் பார்வை எதிலே மொய்க்கிறது பார்த்தீர்களா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும் எனும் திருக்குறள் எங்கே? பிறப்பில் பேதம் பேசும் இவர்கள் வேதத்தின் சாரம் எங்கே?
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு எனும் அறி வின் சாளரமாம் திருக்குறள் எங்கே?
‘‘வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான்.''
(மனுதர்மம், அத்தியாயம் 2, சுலோகம் 11)
இப்படிப்பட்ட சுருதிகளும், ஸ்மிருதிகளும் - எப்பொருள் எத் தன்மைத்தாயினும், எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு எனும் திருக்குறளும் ஒன்றாம்.
தமிழுக்கும், தமிழருக்கும் சிறப் பான எதையும் கீழ்மைப்படுத்தும், கொச்சைப்படுத்தும் பார்ப்பனர் களை அடையாளம் காண்பீர்!
- மயிலாடன்
No comments:
Post a Comment