செருப்பாலடிக்க வேண்டுமா?
குருமூர்த்திகளே நிதானம் தேவை - தேவை!
கேள்வி: 'கணவன் குடித்து விட்டு வந்தால் சாட்டையால் அடியுங்கள்' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்கிறாரே? அப்படியானால் விற்கச் சொன்னவரை செருப்பாலடிக்கலாமா?
பதில்: விற்கச் சொன்னவர்களுக்கு வாக் களித்தவர்களை எதனால் அடிப்பது?
'துக்ளக்' 22.7.2020, பக்கம் 22
இன்று விற் பனைக்கு வெளியில் வந்த 'துக்ளக்'கில் திருவாளர் குருமூர்த்தி எழுதிய பதில் இது.
நியாயமாக இந்தக் கேள்வியை அனு மதித்து இருக்கக் கூடாது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி யாரை மனதிற் கொண்டு சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும்; எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது தானே இரண்டாவது முறை மதுக்கடை திறக் கப்பட்டது. அப்படியானால் இப்படியெல்லாம் கேள்விகள் - பதில்கள் என்றால் - இவை எங்கே போய் முடியும்?
சரி, திருவாளர் குருமூர்த்தி என்ன சொல்கிறார். விற்கச் சொன்னவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்பதையும் தாண்டி வாக்களித்த மக்களை செருப்படிக்கும் கீழான ஒன்றால் அடிக்க வேண்டும் என சொல்லும் குருமூர்த்திகளின் கொழுப்புக்கு அளவேயில்லையா?
இதனை நாடு அனுமதிக்கப் போகிறதா?
மத்தியில் பிஜேபி இருக்கிறது என்ற குருட் டுத் தைரியத்தில், மக்களையே செருப்பாலடிக்க வேண்டும் என்று (அதைவிடக் கேவலமான பொருளில்) சொல்லும் அளவுக்குப் பார்ப் பனர்கள் வந்து விட்டார்களா?
கலைஞரையும், எம்.ஜி.ஆரையும் மதிக்கும் தலைவர்களும், கட்சிக்காரர்களும் பொது மக்களும்தான் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் - முடிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment